கூலிம், டிசம்பர் 7 - சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அரசு ஊழியர்கள் மற்றும் பொது உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் அடங்கிய 1,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மூன்று மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தலைமை செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார், அரசாங்கத்தின் வெள்ளத்திற்குப் பிந்தைய மீட்பு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்குவாட் ஏஹ்சான் மடாணியின் கீழ் தன்னார்வலர்கள் கூடியுள்ளனர் என்றார்.
"நாங்கள் ஸ்குவாட் ஏஹ்சான் மடாணியை நிறுவியுள்ளோம். இதுவரை, 500க்கும் மேற்பட்ட ஐபிடி மாணவர்களுடன் 1,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இதில் ஈடுபட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
"அவர்கள் கிளாந்தானில் ஆறு மாவட்டங்களுக்கும், கெடாவில் இரண்டு மாவட்டங்களுக்கும், திரங்கானுவிலும் வெள்ளத்திற்குப் பிந்தைய உதவிகளை வழங்குவதற்காக அனுப்பப் பட்டுள்ளனர்" என்று அவர் இன்று கூலிம் நகராட்சி மன்றத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாடு முழுவதும் தற்காலிக நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) இன்னும் 10,380 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்று ஷம்சுல் மேலும் கூறினார்.
இதற்கிடையில், தனது உரையில், நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு M.A.L.A.Y.S.I.A-Mesra (நட்பு) ஆதில் (நியாயமான) லுஹுர் (நல்லொழுக்கம்) அமானா (நம்பகமான) யாக்கின் (நம்பிக்கையான) செத்தியா (விசுவாசமான) இஸ்லாஹ் (சீர்திருத்தம்) மற்றும் ஆரிஃப் (புத்திசாலி)- ஆகிய நன் மதிப்புகளைத் தழுவி தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் நினைவுபடுத்தினார்.
".மலேசியா மடாணி கருத்தாக்கத்தில் உள்ள அடிப்படை மதிப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள். பொருள் மற்றும் ஆன் மீக இலக்குகளுக்கு இடையில் சம நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்... அதே நேரத்தில், உற்பத்தி திறனை மேம்படுத்தவும். சம்பளம் அதிகரிக்கும் போது, அரசு ஊழியர்களின் உற்பத்தித்திறனும் உயரும் என்று அரசு நம்புகிறது. "என்றார்.
மேலும், வேலை செய்வதில் மகிழ்ச்சி இருக்க வேண்டும். உணர்ச்சிபூர்வமான நல்வாழ்வைப் பராமரிக்கவும், தனிப்பட்ட பிரச்சினைகளை வீட்டிலிருந்து பணியிடத்திற்கு கொண்டு வருவதைத் தவிர்க்கவும். மிக முக்கியமாக, அரசு ஊழியர்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் "என்று ஷம்சுல் கூறினார்.
பொது சேவையை "பால் மற்றும் மை" (ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்) உடன் ஒப்பிட்ட அவர், பாலை விஷபடுத்தும் "மை" யை அகற்றும் முயற்சிகளில் கவனம் செலுத்தப்படுவதை வலியுறுத்தினார்.
எல்லோரும் எங்களை விமர்சிக்கிறார்கள். ஒரு அரசு ஊழியராக இருப்பதில் பெருமை இல்லாததால் நம்மால் சிறந்த சேவைகளை வழங்க முடிவதில்லை என்றார்.
"ஏன் பெருமை இல்லை? பொது சேவையில் 'அழுக்கை' ஏற்படுத்துபவர்கள் 10 சதவீதத்திற்கு குறைவாக இருந்தாலும், 'கறைகளை' சரி செய்து சுத்தம் செய்வதில் நாங்கள் பிஸியாக இருப்பதால் தான்... இன்னும் 90 சதவீதம் பேர் தூய்மையாக உள்ளனர் "என்று ஷம்சுல் கூறினார்.
- பெர்னாமா








