MEDIA STATEMENT

பதட்டங்களுக்கு மத்தியில்  உலகில் அதிகரித்து வரும் ஆபத்து- சிங்கைப் பிரதமர் கவலை

24 நவம்பர் 2024, 12:01 PM
பதட்டங்களுக்கு மத்தியில்  உலகில் அதிகரித்து வரும் ஆபத்து- சிங்கைப் பிரதமர் கவலை

கோலாலம்பூர், நவ. 24 - “இன்று நாம் மிகவும் ஆபத்தான உலகில் இருப்பதால் அனைவரும் கவலையடைந்துள்ளனர்"  என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அதிகரித்து வரும் உலகளாவிய நிலவரங்களை குறித்து கருத்துரைக்கும் போது குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற மக்கள் செயல் கட்சி (பிஏபி) மாநாட்டில் பேசிய அவர், பெருவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றம் மற்றும் பிரேசிலில் நடந்த ஜி 20 உச்சநிலை மாநாட்டின் உயர்மட்டக் கூட்டங்களின் நிலவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நடந்துகொண்டிருக்கும் போர்கள், நெருக்கடியான வல்லரசு உறவுகள் மற்றும் அதிகரித்து வரும் உறுதியற்ற தன்மை ஆகியவை உலகளாவிய புவிசார் அரசியலின் ஆபத்தான நிலையை எடுத்துக்காட்டுகிறது என்று இணையம் வாயிலாக   நேரடியாக ஒளிபரப்பப்பட்ட உரையில் அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் பெரும் போர்கள் நிகழ்ந்து வருகின்றன. அமெரிக்க-சீனா உறவு மிகவும் சவாலான இடத்தில் உள்ளது. மேலும் புவிசார் அரசியல் ரீதியாக  நிகழும் பல காய் நகர்த்தல்கள்   நிலைமையை  தவறாக வழி நடத்தக்கூடும் அவர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக  அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய ஒழுங்கு முறையால் நாம் அனைவரும் பயனடைந்துள்ளோம்.

இதை லத்தீன் மொழியில் பாக்ஸ் அமெரிக்கானா என்று சொல்கிறோம். ஐக்கிய நாடுகள் சபை, ஐ.எம்.எஃப். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, சர்வதேச நீதிமன்றம்  சர்வதேச விதிமுறைகள் மற்றும் நடத்தைகளை வடிவமைத்தல் போன்ற பலதரப்பு நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் ஆதிக்க சக்தியான அமெரிக்காவைக் கொண்ட உலகம் என்பது அதன் அர்த்தம்.

இப்போது, ​​நிலைமை மாறி வருகிறது. அமெரிக்கா இன்னும் முன்னணியில் உள்ளது. ஆனால் அது இனி உலகின் போலீஸ்காரராக இருக்க விரும்பவில்லை.

அமெரிக்கா முதலில் என்ற பிரசாரத்தை முன்வைத்து  முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று வோங் கூறினார்.

டிரம்பின் வெற்றி அமெரிக்க மக்களிடையே வளர்ந்து வரும் உணர்வை பிரதிபலிக்கிறது. இந்த உலகளாவிய ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு அவர்கள் அதிக விலை கொடுக்கிறார்கள். ஆனால்  அதற்கான பலனை அனுபவிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், சீனா மற்றும் இந்தியா போன்ற பிற வளரும் சக்திகளும் உள்ளன.

ஆனால் அவர்களும் தங்கள் சொந்த உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் அவர்கள் இன்னும் பெரிய உலகளாவிய பொறுப்புகளை ஏற்கும் நிலையில் இல்லை என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.