MEDIA STATEMENT

சிலாங்கூர் எஃப்.சி. பயிற்றுநர் பொறுப்பை கினோஷி ஏற்றார்

24 நவம்பர் 2024, 5:55 AM
சிலாங்கூர் எஃப்.சி. பயிற்றுநர் பொறுப்பை கினோஷி ஏற்றார்

கோலாலம்பூர், நவ.24 -   சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து குழுவின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜப்பானைச் சேர்ந்த கட்சுஹிட்தோ கினோஷி    நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் எதிர்பாராத விதமாக ராஜினாமா செய்த நிட்ஜாம் ஜாமில் இடத்தை கினோஷி   நிரப்புகிறார்.

நேற்றிரவு இந்த அறிவிப்பை வெளியிட்ட அந்த கிளப்,  கினோஷி பரந்த  அனுபவமுள்ள பயிற்சியாளராக விளங்குவதோடு  விளையாட்டு தொடர்பான  ஆழமான அறிவையும் வலுவான தலைமைப் பண்புகளையும் கொண்டுள்ளார் எனக் கூறியது.

அவரது நியமனம் ரெட் ஜெயண்ட் என அழைக்கப்படும் சிலாங்கூர் அணி  ஒரு புதிய கட்டத்தில் நுழைகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

அணி உருவாக்கம், உத்தி மற்றும் இளம் வீரர் மேம்பாடு ஆகியவற்றில் அவருக்கு இருக்கும் நிபுணத்துவம் எங்கள் அணியின்  வெற்றியை அடைவதற்கான தேடலில் பெரும் சொத்தாக இருக்கும்.

பயிற்சியில் கினோஷிக்கு இருக்கும்  நிபுணத்துவம் மற்றும்  பல முன்னணி பயிற்சியாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் ஆகியவை  அணி வெற்றிபெறத் தேவையான திசையையும் அடையாளத்தையும் வழங்கும் என்று சிலாங்கூர் எஃப்சி கூறியது.

.இதனிடையே, இந்த நியமனம் தொடர்பில் தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட கினோஷி, சிலாங்கூரில் இணைவது தனக்கு கிடைத்த பெருமை என்றும் அணியின் திறமையான வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

நாம் ஒன்றுபட்டு வியூக  ரீதியாக வலுவான மற்றும் வெற்றிக்கான ஆர்வமும் உறுதியும் நிறைந்த ஒரு அணியை உருவாக்க முயற்சிப்போம் என தோக்கியோவை பூர்வீகமாகக் கொண்ட  60 வயதான கினோஷி குறிப்பிட்டார்.

சிலாங்கூர்  எஃப்.சி. தற்போது 2024/2025 சூப்பர் லீக் புள்ளிப் பட்டிலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 40 புள்ளிகளை சேகரித்து முதல் இடத்தில் உள்ள ஜோகூர் டாருல் தாக்ஸிம் குழுவுடன் ஒப்பிடுகையில் சிலாங்கூர் 11 புள்ளிகள்  பின்தங்கியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.