MEDIA STATEMENT

சிலாங்கூர் சொந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்கவும், தொழில்நுட்ப கண்டு பிடிப்புகளில் முன்னணியில் இருக்கவும் திட்டமிடுகிறது - எம். பி

23 நவம்பர் 2024, 8:04 AM
சிலாங்கூர் சொந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்கவும், தொழில்நுட்ப கண்டு பிடிப்புகளில் முன்னணியில் இருக்கவும் திட்டமிடுகிறது - எம். பி

ஷா ஆலம், நவம்பர் 22 -சிலாங்கூர் தனது சொந்த செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்கவும், தொழில்நுட்பத்தின் கண்டு பிடிப்புகளில் தேசத்தை வழிநடத்தவும் விரும்புகிறது என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி கூறினார். 

புகழ்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி நிறுவனமான என் விடியாவுடன் ஒரு இறையாண்மை செயற்கை நுண்ணறிவு உருவாக்க நிர்வாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

"ஒரு இறையாண்மை AI என்பது ஒரு மாநிலம் அல்லது தேசத்தை சேர்ந்தது என்று பொருள். மற்ற நாடுகளின் செயற்கை நுண்ணறிவு களை நாம் சார்ந்து இருக்க முடியாது என்பதால் என் விடியாவுடன் கூட்டங்களை நடத்துகிறோம்.

"நாம் மற்ற நாடுகளின் செயற்கை நுண்ணறிவு களைச் சார்ந்து இருந்தால், அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துகளின் படி தரவு, அடையாளம் மற்றும் நமது நடத்தை ஆகியவற்றைத் தீர்மானிக்கிறார்கள்" என்று 2025 சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்திற்கான இறுதி நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

மனித மூலதனத்திற்கான மேம்பாட்டு பயிற்சி வழங்குவதில் தொடங்கி, செயற்கை நுண்ணறிவு முன் முயற்சியை உணர மாநில நிர்வாகம் RM 5 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அமிருடின் மேலும் கூறினார்.

தொழில்நுட்பத்தின் ஒட்டுமொத்த மதிப்பை ஆய்வு செய்வதற்கான சிலாங்கூரின் திட்டம் செயற்கை நுண்ணறிவு வெள்ளை அறிக்கை என்று அவர் கூறினார்.

"RM5 மில்லியனுடன், சிலாங்கூரில் தயாரிக்கப்பட்ட சிலாங்கூர் AI உட்பட செயற்கை நுண்ணறிவை வடிவமைக்கத் தயாராக உள்ள ஒரு மாநிலமாக நாங்கள் மாறுவோம், இது சிலாங்கூரின் அசல் நுண்ணறிவில் இருந்து பிறந்தது" என்று அவர் கூறினார்.

2025 மாநில வரவு செலவுத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு இன்குபேட்டர் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு டிரெய்ல்ப்ளேசர்ஸ் முன்முயற்சி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு திட்டத்தை செயல்படுத்த RM5 மில்லியன் ஒதுக்கீடு அடங்கும்.

சிலாங்கூர் அரசாங்கம் ஒரு செயற்Nகை நுண்ணறிவு வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அமிருடின் கூறினார். அடுத்த ஆண்டு மாநில சட்டப் பேரவைக் கூட்டத்தில், அரசு சேவைகளின் செயல் திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை விவரிக்கும்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.