MEDIA STATEMENT

தஞ்சோங் டுவாபிளாசில் 200 ஹெக்டேர் நிலத்தை  கையகப்படுத்த  RM 100 மில்லியன்

15 நவம்பர் 2024, 3:16 PM
தஞ்சோங் டுவாபிளாசில் 200 ஹெக்டேர் நிலத்தை  கையகப்படுத்த  RM 100 மில்லியன்

ஷா ஆலம், 15 நவம்பர்;- தஞ்சோங் டுவாபிளாசில் 200 ஹெக்டேர் புதிய நிலத்தை  கையகப்படுத்த மற்றும் 30 ஏக்கர்  நிலமண் சுத்திகரிப்பு  செய்ய  RM 100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

WTE) திட கழிவு சுத்திகரிப்பின் வழி மின் உற்பத்தி செய்யும்  ஆலை கட்டுமானத்தை  தொடங்குவதற்கு முன் பணிகள் செய்ய என்று டத்தோ  ஸ்ரீ  அமிருடின் ஷாரி கூறினார்.

"தற்போது உள்ள தஞ்சோங் டுவாபிளாசில்  கழிவுகளை கொண்டு  நிலத்தை நிரப்பும் தளம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழு கொள்ளவை நெருங்குகிறது" என்று சிலாங்கூர் பட்ஜெட் 2025 ஐ முன்வைக்கும் போது அவர் கூறினார்.

அதே நேரத்தில், ஜெராமில் உள்ள கழிவு மாற்று மின்ஆற்றல் (WTE) ஆலையுடன் கழிவு மேலாண்மை செயல் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை மையத்தை (ISWMC) மேம்படுத்த RM42 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமிருடின் அறிவித்தார்.

முன்னதாக, ஜெராமில் கட்டப்பட்டு வரும் WTE நாட்டின் மிகப்பெரிய கழிவு மாற்றல் மின் ஆலையாக மாறும் என்றும், ஒரு நாளைக்கு 3,000 டன் திடக்கழிவுகளை பதப்படுத்தும் திறன் கொண்டது என்றும் அமிருடின் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் 30 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள  கட்டுமானம், அதிக பொருளாதார வாய்ப்புகளைத் தூண்டும் அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு சட்டம் 2007 ஐ ஏற்க ஒப்புக்கொண்டதாக அமிருடின் விளக்கினார். திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மை சட்டம் 2007, திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை மத்திய அரசையும் ஈடுபடுத்தும்.

ஊராட்சி ஒருங்கிணைப்பு பிரிவு (எஸ்பிபிடி) மற்றும் அதன் துணை நிறுவனங்கள் டாருல் எஷான் பெர்ஹாட் குழுமம் மற்றும் வேல்ட் வைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (டபிள்யூ. எச். பி) போன்ற மாநில அரசு நிறுவனங்கள்  இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளது, அவர்கள் இந்த புதிய முன்முயற்சி தொடர்பான உகந்த தீர்வைக் கண்டறிய ஒத்துழைத்து வருகின்றனர்.

"இந்த மாநிலத்தில் கழிவு மேலாண்மை சங்கிலியில் ஈடுபட்டுள்ள WHB மற்றும் பிற அரசுக்கு சொந்தமான துணை நிறுவனங்கள் மக்களின் நலன்களுக்கு தொடர்ந்து உத்தரவாதம் அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக சட்டம் 672 இன் அபிலாஷைகளை ஆதரிப்பதில் தொடர்ந்து ஒத்துழைக்கும்" என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.