பத்துமலை நவ 12 ;- பத்துமலை இந்தியக் குடியிருப்பு சங்கத்துக்கு எதிராக ஆட்சேபனை தெரிவித்துக் கொண்ட 26 குடும்பங்கள் நிலப் பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்கு அப்பகுதி இந்திய சமூகத் தலைவர் வீரையா கூறிய தகவல்படி.
பிரச்சனைக்குரிய அவர்கள் நில உரிமம் இல்லாதவர்கள், இந்த 26 பேர்களின் பிரச்சனைகள் எப்படி ஏற்பட்டது? என்ற கேள்விக்கு,
அதாவது ஒரு நில உரிமையாளரின் உபரி நிலத்தில் நில உரிமையாளரின் தயவில் அல்லது அவரிடமிருந்து வாங்கிய நிலத்தில் வீடு கட்டி கொண்டவர்கள் என்கிறார் திரு. வீரையா.
அதே வேளையில் இந்தக் குடியிருப்பை ஒட்டி ஓடும் ஆற்றின் தரிசு நிலத்தில் வீடு கட்டியிருந்த 16 குடும்பங்களின் பிரச்சனை முன்பு எழுந்தது.
அப்படிப்பட்டவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்குவதே சிலாங்கூர் அரசின் பாணியாக இருந்தது , ஆனால் அன்று நமது சட்டமன்ற உறுப்பினராகவும், இன்று மாநில மந்திரி புசாராகவும் இருக்கும் டத்தோ ஸ்ரீ அமிருடின் மக்களின் கோரிக்கையை மதித்து முதல் கட்டமாக அந்த ஆற்றை ஒட்டி இருந்த 16 வீடுகளுக்கும் பத்து ஆராங்கில் நிலம் ஒதுக்கித் தந்தார். வீடுகளுக்கு இடையில் நில உரிமையாளரின் உபரி நிலத்தில் வீடு கட்டிக் குடியேறியவர்களுக்கும், அதே பத்து ஆராங்கில் நிலம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.
முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, மற்றவர்கள் நிலத்தில் ஒரு பகுதியை வாங்கியோ அல்லது தயவிலோ வீடு கட்டியவர்கள் நிலப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது, நில உரிமையாளருக்கும் வீடு கட்டியவருக்குமான தனிப்பட்ட விவகாரம்
அதனை அவர்களுக்குள் தீர்த்துக் கொள்ளட்டும் என்ற அடிப்படையில் ஒதுங்கிக் கொள்ளாமல், மாண்புமிகு மந்திரி புசார் அவர்களுக்கும் நிலம் வழங்கி அனைவரையும் அரவணைத்தது, தவறா? நமக்கு நல்லது செய்வோரை தூற்றுவது தர்மமா என்று கேட்டார்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த நிலத்தைக் காடு என்று விமர்சிக்கிறார்கள், ஆனால் ஒரு தோட்டத்தை வாங்கி அதில் அரசாங்கம் இவர்களுக்கு நிலம் கொடுத்துள்ளது எவ்வளவு பெரிய உபகாரம் என எண்ணிப் பார்க்கவில்லை. இங்கே சுற்றி இருந்த தோட்டங்கள் எல்லாம் (குறிப்பாக சிலாங்கூரில்) கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போய் விடுகிறது. பத்து ஆராங் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பகுதி என்பதை நாம் மறக்கக் கூடாது.
ஆரம்ப காலம் முதல் ஆற்றுத் தரிசு நிலத்தில் குடியிருந்தவர்களும், நில உரிமையாளரின் தயவில் உபரி நிலத்தில் வீடு கட்டியவர்களும் அவர்களுக்கு எனத் தனிக் குழுவை ஏற்படுத்திக்கொண்டு நிலத்திற்கான கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களுக்கு பத்துமலை இந்தியக் குடியிருப்பாளர் சங்கத்தில் அங்கத்துவம் இல்லை என்றார் அவர்.








