MEDIA STATEMENT

விளையாட்டு வசதிகளை மேம்படுத்த கூடுதல் ஒதுக்கீடு தேவை

11 நவம்பர் 2024, 1:51 PM
விளையாட்டு வசதிகளை மேம்படுத்த கூடுதல் ஒதுக்கீடு தேவை

ஷா ஆலம், நவ 11: 2025 மாநில பட்ஜெட்டில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு குறிப்பாக சிலாங்கூர் 2026 சுக்மாவை ஏற்று நடத்துவதை முன்னிட்டு சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

அனைத்து தரப்பினரின் குறிப்பாக விளையாட்டு வீரர்களின் வசதிக்காக, மேம்படுத்தும் செயல்முறை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் கூறினார்.

"விளையாட்டு வசதிகளை பழுது பார்ப்பதற்கு மேம்படுத்துவதற்கும் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும் என நான் நம்புகிறேன், அம் மாதிரியான ஊக்கமளிப்பு பிபிடி அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் விரைவில் செயல்பட முடியும்.

"அரங்கங்கள் மற்றும் விளையாட்டு சாதனங்களை உடனடியாக பழுது பார்க்கவும் மேம்படுத்தவும் முடிந்தால், அது விளையாட்டு வீரர்களுக்கு நன்மையை அளிக்கும்," என்று அவர் சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.