MEDIA STATEMENT

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு சிறப்பு படுக்கை மற்றும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது

11 நவம்பர் 2024, 1:26 PM
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு சிறப்பு படுக்கை மற்றும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது

ஷா ஆலம், நவ. 11: விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு விலா எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிறப்பு படுக்கை மற்றும் சக்கர நாற்காலியை செந்தோசா தொகுதியின் சமூக சேவை மையம் வழங்கியது.

பாதிக்கப்பட்டவர் எளிதாகக் குணமடையவும், அக்குடும்பத்தின் சுமையை குறைக்கவும் இந்த பொருட்களை நன்கொடையாக வழங்கியதாக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி குணராஜ் கூறினார்.

"என்னைப் பிரதிநிதிப்படுத்தி தாமான் மஸ்னா, கிள்ளானில் உள்ள பாதிக்கப்பட்ட முகமட் சயாஹ்ரானின் வீட்டிற்கு சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வக் குழு (SUKA) மருத்துவப் பயணம் மேற்கொண்டது.

பாதிக்கப்பட்டவர் அக்குடும்பத்தின் முக்கிய வருமானம் ஈட்டுபவர் என்பதால் அவர்கள் மிகவும் கடினமான காலத்தை கடந்து வருகின்றனர்” என்று அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

செந்தோசா சமூக சேவை மையத்தின் பங்களிப்பு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்தச் சவாலை எதிர்கொள்வதில் இந்தக் குடும்பம் தைரியமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.