MEDIA STATEMENT

ஸ்கோர் A+ கருத்தரங்கில் 589 எஸ்பிஎம் மாணவர்கள் பங்கேற்றனர்

11 நவம்பர் 2024, 1:08 PM
ஸ்கோர் A+ கருத்தரங்கில் 589 எஸ்பிஎம் மாணவர்கள் பங்கேற்றனர்

ஷா ஆலம், நவ 11: சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை மற்றும் சிலாங்கூர் அறக்கட்டளை இணைந்து நடத்திய ஸ்கோர் A+ கருத்தரங்கில் மொத்தம் 589 எஸ்பிஎம் மாணவர்கள் பங்கேற்றனர்.

கடந்த நவம்பர் 9 ஆம் தேதி அன்று ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த கருத்தரங்கில் சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர் என முகநூல் மூலம் யாயாசான் சிலாங்கூர் தெரிவித்தது.

"இந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த தளத்தை வழங்குவதில் இந்த கருத்தரங்கு திட்டம் ஒரு சிறந்த முன் முயற்சியாகும்.

"எஸ்பிஎம் 2024 இல், தேர்ச்சி அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்" என்று தெரிவிக்கப்பட்டது.

அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்ட சிலாங்கூர் அறக்கட்டளை, தேர்வு கேள்விகளுக்கு மிகவும் திறம்பட பதிலளிக்க மாணவர்களுக்கு துல்லியமான நுட்பங்களை கற்பிக்கும்.

"இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவு சிறப்பாக இருந்ததை தொடர்ந்து,

நவம்பர் 23 அன்று மேலும் நான்கு மாவட்டங்களில் கருந்தரங்கை யாயாசான் சிலாங்கூர் ஏற்பாடு செய்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.