MEDIA STATEMENT

பிங்காஸ் உதவி பெறுனர்களுக்கு  திட்டம் நிறைவடைந்த பிறகு உதவுவது  குறித்து சிலாங்கூர் ஆலோசித்து வருகிறது

11 நவம்பர் 2024, 12:56 PM
பிங்காஸ் உதவி பெறுனர்களுக்கு  திட்டம் நிறைவடைந்த பிறகு உதவுவது  குறித்து சிலாங்கூர் ஆலோசித்து வருகிறது

ஷா ஆலம், நவ 11: பிங்காஸ் உதவி திட்டத்தின்  பெறுனர்களுக்கு  உதவி காலத்திற்கு பின்   அவர்களின் வாழ்க்கை மேம்பாடு காண உதவிட  பிற செயல் திட்டங்களை ஆலோசித்து வருகிறது.

பிங்காஸ் உதவி பெற்றவர்கள் ஒரு நல்ல வாழ்க்கை முறையை நடத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக சொந்த வருமானத்தை உருவாக்குவது உட்பட அனைத்து அம்சங்களையும் அச்செயல் முறை ஆய்வு செய்யவுள்ளதாக   சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி  கூறினார்.

"இரண்டு வருடங்கள் பிங்காஸ் மாதாந்திர உதவியை பெற்ற பிறகு, அவர்கள் சுய காலில் நிற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன் பொருள் அவர்கள் அரசாங்கத்தை மட்டும் சார்ந்திருக்க கூடாது" என்று சிலாங்கூர் கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்கில் உள்ள 46 திட்டங்களில் பிங்காசும் அடங்கும்.இத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு RM300 மாதாந்திர உதவியை வழங்குகிறது.

மாதக் குடும்ப வருமான வரம்பு RM3,000லிருந்து RM5,000ஆக உயர்த்தப் பட்டதன் மூலம் பிங்காஸ் திட்டம் தரம் உயர்த்தப் பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.