MEDIA STATEMENT

விளையாட்டு மைதானத்தின் நடைபாதையை மேம்படுத்த RM81,700 ஒதுக்கீடு

8 நவம்பர் 2024, 11:33 AM
விளையாட்டு மைதானத்தின் நடைபாதையை மேம்படுத்த RM81,700 ஒதுக்கீடு

ஷா ஆலம்,நவ 8: பெட்டாலிங் ஜெயா ஜாலான் SS2/48 இல் உள்ள விளையாட்டு மைதானத்தின் நடைபாதையை மேம்படுத்த மொத்தம் RM81,700யை கம்போங் துங்கு தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கீடு செய்துள்ளார். 

பென்யாயாங் சிலாங்கூர் திட்டத்தின் (PSP) கீழ் வழங்கப்படும் மாநில நிதி மூலம் உள்ளூர்வாசிகள் பயன்பெறும் வகையில் குறிப்பிட்ட இடத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக லிம் யி வெய் கூறினார்.

"இந்த நடைபாதை மிகவும் பழமையானது மற்றும் குறுகியது.எனவே, உள்ளூர்வாசிகளுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு பாதுகாப்பானதாக இருப்பதோடு, சமீபத்திய விவரக்குறிப்புகளின்படி அதை மேம்படுத்தினோம்.

"இந்த மேம்படுத்தும் திட்டம் கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டது. இந்த நடைபாதையை மேம்படுத்தியது குடியிருப்பாளர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் அவர்கள் இதை சிறப்பாகப் பயன்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது," என அவர் கூறினார்.

முன்னதாக, 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது,பொது வசதிகளின் தரத்தை மேம்படுத்தவும், புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் RM24 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் அறிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.