MEDIA STATEMENT

குவைத்திடமிருந்து போர் விமானங்களை வாங்குவது தொடர்பில் அமைச்சர் காலிட் பேச்சு

5 நவம்பர் 2024, 4:17 AM
குவைத்திடமிருந்து போர் விமானங்களை வாங்குவது தொடர்பில் அமைச்சர் காலிட் பேச்சு

கோலாலம்பூர், நவ.5- குவைத் விமானப் படையிடமிருந்து போர் விமானங்களை வாங்குவதில் மலேசியா கொண்டுள்ள  ஆர்வம் தொடர்பான  தொடர் பேச்சு வார்த்தைக்காக பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் மலேசியாவுக்கான குவைத் தூதர் ரஷீட் முகமது அல்-சலேவை நேற்று சந்தித்தார்.

கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் குவைத்திற்கு தாம் மேற்கொண்ட  பணி நிமித்தப்  பயணத்தின் தொடர்ச்சியாக பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த  சந்திப்பு  அமைவதாக   காலிட் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.

நான் குவைத்தில் இருந்த போது  அந்நாட்டின் பிரதமர், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சராக இருக்கும்  துணைப் பிரதமர் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தினேன்.

குவைத் விமானப் படைக்குச் சொந்தமான F/A-18C/D லெகசி ஹார்னெட் போர் விமானங்களை இயக்குவதற்கு பொறுப்பான படைப் பிரிவை கொண்ட அகமது அல்-ஜாபர் விமான தளத்தையும் நான் பார்வையிட்டேன் என்று அவர் கூறினார்.

இந்த போர் விமானங்களை வாங்குவது அரச மலேசிய ஆகாயப் படையின் திறனையும் தயார் நிலையையும் அதிகரிக்கும் என்று காலிட் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.