MEDIA STATEMENT

தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் RM 107,000 க்கும் அதிகமான மதிப்புள்ள 13 கால் நடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

2 நவம்பர் 2024, 9:46 AM
தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் RM 107,000 க்கும் அதிகமான மதிப்புள்ள 13 கால் நடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

கோத்தா பாரு, நவம்பர் 2: பாசிர் மாஸில் உள்ள கம்புங் புக்கிட் தண்டக்கில் 13 கால்நடைகளை ஏற்றிச் சென்ற டிரக்கை தடுத்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நேற்று கைது செய்ததன் மூலம் கால்நடை கடத்தல் நடவடிக்கையை  (பிஜிஏ) என்னும் கிழக்கு பகுதி பொது நடவடிக்கை படை பிரிவு முறியடித்தது.

7, 000 கிலோகிராம் எடையுள்ள மற்றும் RM107,270 மதிப்புள்ள அனைத்து கால்நடைகளும் தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படுவதாக PGA கிழக்கு படைப்பிரிவின் தளபதி நிக் ரோஸ் அஷான் நிக் அப் ஹமீத் தெரிவித்தார்.

"பிற்பகல் 12:45 மணியளவில் ஆபரேஷன் டாரிங் வாவசான் கிளாந்தனின் கீழ் ரோந்து பணிகளை மேற்கொண்ட போது 22 மற்றும் 42 வயதுடைய இரண்டு ஆண்களை சந்தேகத்திற்கிடமான முறையில்  சென்ற லாரியை பட்டாலியன் 8 இன் குழு தடுத்து வைத்ததை அடுத்து இந்த பறிமுதல் மேற்கொள்ளப்பட்டது".

சோதனையில் ஹை காம் டிரக்கில் தக்க  ஆவணங்கள் இல்லாமல் 13 கால்நடைகள் இருப்பது தெரியவந்தது. உள்ளூர் சந்தைக்கு கால்நடைகளை டெலிவரி செய்பவர்கள் என நம்பப்படும் இருவரும்'' என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விலங்குகள் சட்டம் 1953 இன் பிரிவு 36 (1) இன் கீழ் மேலும் விசாரணைக்காக ஆண்கள் இருவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ரந்தாவ் பாஞ்சாங் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.