MEDIA STATEMENT

பராமரிப்பு சேவைகளை வழங்குவதை மேம்படுத்த சிலாங்கூர் சிறப்புக் குழுவை அமைத்தது

2 நவம்பர் 2024, 1:36 AM
பராமரிப்பு சேவைகளை வழங்குவதை மேம்படுத்த சிலாங்கூர் சிறப்புக் குழுவை அமைத்தது

ஷா ஆலம், நவம்பர் 2 - சிலாங்கூரில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான பராமரிப்பு சேவைகள் தொடர்பான சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கு, மதிப்பீடு செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் மாநில அரசு பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் சமூக நலனுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறுகையில், அதன் நிறுவலின் முதல் ஆண்டுக்கு, சுபாங் ஜெயா மாநில சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் இங் மேய் ஸ்ஸே தலைமையிலான குழு குழந்தை பராமரிப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றார்.

காவல்துறையின் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில், சிலாங்கூரில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் குழந்தை துஷ்பிரயோகம் வழக்குகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் மிக அதிகமாக இருக்கின்றன.

"குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தற்போது உள்ள சட்ட அமைப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் மறு ஆய்வு செய்வதும், பலவீனங்களை அடையாளம் காண்பதும், மேம்படுத்துவதும் எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதுகாப்பைத் தவிர, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான பராமரிப்பு மையங்களின் ஆபரேட்டர்கள் தங்கள் வளாகங்களை சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்தில் பதிவு செய்ய ஊக்குவிக்கும் நோக்கில் தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் ஆய்வு செய்யப்படும்.

மக்கள் தொகை அதிகரிப்பை தொடர்ந்து வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப இந்தக் குழுவை நிறுவுவதாகவும் அன்ஃபால் கூறினார்.

"பராமரிப்பு சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே இந்த மேம்பாடுகள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முக்கியமானது  இது" என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.