MEDIA STATEMENT

நாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றா நோய்களால் பாதிப்பு

31 அக்டோபர் 2024, 2:14 AM
நாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றா நோய்களால் பாதிப்பு

ஷா ஆலம், அக். 31- உடலாரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படுவதைத்

தவிர்க்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும்

அதேவேளையில் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரித்துக்

கொள்ளும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்களில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீரிழிவு, உயர் இரத்த

அழுத்தம், அதிக கொலேஸ்ட்ரோல் மற்றும் உடல் பருமன் ஆகிய நான்கு

தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதை 2023ஆம் ஆண்டிற்கான

சுகாதாரம் மற்றும் நோயியில் ஆய்வு காட்டுகிறது என்று பொது சுகாதாரத்

துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

அவர்களில் 15.6 விழுக்காட்டினர் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டுள்ள

வேளையில் அந்த எண்ணிக்கையில் 84 விழுக்காட்டினர் 18 முதல் 29

வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே சமயம், உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்

எண்ணிக்கை 29.2 விழுக்காடாக உள்ளது. மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு

50.1 விழுக்காடாக இருந்த உடல் பருமனானவர்கள் எண்ணிக்கை

கடந்தாண்டு 54.4 விழுக்காடாக உயர்ந்தது என்று அவர் சொன்னார்.

ஆகவே, பொது மக்கள் தங்களின் உடலாரோக்கியத்தை சீராக பேணிக்

காத்து வர வேண்டும் என்பதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும்

அதிகரித்துக் கொள்ள வேண்டும். புகைப்பழக்கத்தை தவிர்த்து எப்போதும்

ஆரோக்கிய மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என அவர்

வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.