கிள்ளான் அக் 30;- இவ்வாண்டு தீபாவளியை நாட்டிலுள்ள மற்ற இந்துக்களைப் போல் கிள்ளான் ஜாலான் ஜத்தியில் இருக்கும் சிறப்பு குழந்தைகள் நலன் காப்பு மையத்தின் 16 சிறுவர்கள் மற்றும் எழுவரும் ஆனந்தமாகக் கொண்டாட உதவியது கிள்ளான் பண்டார் பாக்லேண்டில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ முனியாண்டி கோவில்.
அந்த மையக் காப்பாளர் திருமதி.தனலட்சுமி கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த மையத்தில் தங்கியிருப்பவர்கள் அவர்கள் விரும்பிய உடைகள் மற்றும் காலணிகளைக் கிள்ளான் ஜாலான் தைப்பிங்கிலும், தாமான் செந்தோசாவிலும் வாங்குவதற்கான நன்கொடையை கோவில் வழங்கிச் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன்.
ஆடை வாங்கிய பின் சிறுவர்கள் விரும்பிய உணவை சுவைக்கவும் அருகே உள்ள உணவகத்தில், உணவு க்குத் திரு. வீரகுமார் ஏற்பாடு செய்திருந்தது, அந்த மையத்தில் உள்ள அனைவருக்கும் தீபாவளி ஆனந்தத்தை வழங்கியது.
இவ்வாண்டு தீபாவளியை இந்த இல்ல சிறுவர்களும் மற்றவர்களும் இன்பமாக கொண்டாட பெரும் சிரத்தை எடுத்துக் கொண்ட ஆலயத் தலைவர் திரு. ரமேஷ் மற்றும் அவரின் நிர்வாக உறுப்பினர்களுக்கும், ஏற்பாடு மற்றும் உணவு வழங்கிய ம. சிவகுமார் குழுவினருக்கும் தங்கள் நன்றியை திருமதி தனலட்சுமி தெரிவித்துக்கொண்டார்.








