MEDIA STATEMENT

காணாமல் போன இளம்பெண்ணை கண்டுபிடிக்க சுபாங் ஜெயா போலீஸ் உதவி கோருகிறது

27 அக்டோபர் 2024, 10:39 AM
காணாமல் போன இளம்பெண்ணை கண்டுபிடிக்க சுபாங் ஜெயா போலீஸ் உதவி கோருகிறது

கோலாலம்பூர், அக்டோபர் 27 - வெள்ளிக்கிழமை மதியம் சுபாங் ஜெயா வில் உள்ள ஏயோன் பிக்கில் கடைசியாகக் காணப்பட்ட காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை போலீசார் கோருகின்றனர்.

அதே நாளில் மாலை 5.32 மணிக்கு பானுப்ரியா பாலமுருகன் காணாமல் போனது குறித்து புகார்  பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா காவல்துறை தலைவர் ஏ. சி. பி வான் அஸ்லான் வான் மமத் தெரிவித்தார்.

"பானுப்ரியா சுமார் 168 செமீ உயரம், 55 கிலோ எடை, பழுப்பு நிற தோல், பழுப்பு நிற கண்கள், நீண்ட கருப்பு நிற முடி, முழு உதடுகள் மற்றும் பரந்த மூக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளார்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவர் இருக்கும் இடம் குறித்து தகவல் உள்ள எவரும் தங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகவும் அல்லது சுபாங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தை 03-78627222 அல்லது 03-78627100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.