செய்தி ஆர்.ராஜா
ஷா ஆலம், அக். 26 இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலாங்கூரிலுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசின் சார்பாக மானியம் வழங்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
[caption id="attachment_516732" align="alignnone" width="1200"]
Dato' Menteri Besar Dato' Seri Amirudin Shari menyampaikan cek cura RM5,000,000,00 kepada Sekolah-sekolah Jenis Kebangsaan Tamil (SJKT) Negeri Selangor dalam majlis perasmian sambutan Deepavali peringkat negeri di Dataran Klang @ Padang Chetty, Klang pada 26 Oktober 2024. Foto AHMAD ZAKKI JILAN/MEDIA SELANGOR[/caption]
சிலாங்கூர் மாநில அரசின் சார்பில் 99 தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டது. பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் மானியத்தைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும் உயர்கல்வி பயிலும் 602 இந்திய மாணவர்களுக்கு இந்த விழாவில் மானியம் வழங்கப்பட்டது.
இது தவிர ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா சார்பாக கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 15 தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்கள் வழங்கும் அங்கமும் இந்நிகழ்வில் இடம் பெற்றது. மேலும், மாநிலத்திலுள்ள ஆலயங்களுக்கு மூன்றாம் கட்ட மானியம் வழங்கும் நிகழ்வில் 68 வழிபாட்டுத்தலங்களுக்கு 600,000 வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.








