புத்ராஜெய்யா, அக்டோபர் 25 - பற்பல சிக்கலுகுள்ளான மற்றும் கைவிடப்பட்ட தனியார் வீட்டுத் திட்டங்களுக்கான பணிக்குழு (TFST) ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் RM 44.59 பில்லியனின் மொத்த மேம்பாட்டு மதிப்புடைய (GDV) 46,139 தனியார் வீட்டு மனைகளை உள்ளடக்கிய 371 திட்டங்களை புதுப்பித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட திட்டங்களில் 348 திட்டங்கள் நிறைவு மற்றும் இணக்க சான்றிதழைப் பெற்றுள்ளன என்று துணை வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டத்தோ அய்மான் அதிராஹ் சாபு தெரிவித்தார்.
தாமதமான 17 திட்டங்கள் சுமூகமாக மீண்டும் தொடங்கப் பட்டுள்ளன என்றும், கைவிடப்பட்ட மேலும் ஆறு திட்டங்கள் புதுப்பிக்கபட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
"ஒட்டுமொத்த சாதனைகளில், 25 திட்டங்கள் அல்லது 4,813 வீடுகள் செப்டம்பர் மாதத்தில் மட்டும் வெற்றிகரமாக புதுப்பிக்கப் பட்டன, உள்ளூர் மதிப்புபடி RM 18.08 பில்லியன்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், டி. எஃப். எஸ். டி 303 தாமதமான திட்டங்கள், 379 பற்பல சிக்கலுகுள்ளான திட்டங்கள் மற்றும் 113 கைவிடப்பட்ட திட்டங்களை அடையாளம் கண்டு கவனித்து மீட்டதாக அமைச்சர் கூறினார்.
உள்ளூர் அதிகாரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பயன்பாட்டு வழங்குநர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளைக் கண்டறிய முடியும் என்பதால், திட்டத்தின் முன்னேற்றம் கவனமாக கண்காணிக்கப்படுவதை உறுதி செய்ய தள வருகைகள் மற்றும் நெருக்கமான கண்காணிப்பு அவசியம் என்று ஐமான் அதிராஹ் கூறினார்.
கைவிடப்பட்ட 113 திட்டங்களை மீட்டெடுப்பதை விரைவுபடுத்துவதற்காக சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியம், பேராக் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியம், திரங்கானு மாநில பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் இண் வாட்டர் கன்சோர்ட்டியம் எஸ். டி. என். பிஎச்டி ஆகியவற்றின் நியமனங்களை நீட்டிக்கவும் அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.








