MEDIA STATEMENT

ஆதரவற்ற சிறார்களுக்கு தீபாவளி புத்தாடைகள்- பலாக்கோங் உறுப்பினர் ஓங் சுன் வெய் வழங்கினார்

25 அக்டோபர் 2024, 9:54 AM
ஆதரவற்ற சிறார்களுக்கு தீபாவளி புத்தாடைகள்- பலாக்கோங் உறுப்பினர் ஓங் சுன் வெய் வழங்கினார்
ஆதரவற்ற சிறார்களுக்கு தீபாவளி புத்தாடைகள்- பலாக்கோங் உறுப்பினர் ஓங் சுன் வெய் வழங்கினார்

செராஸ், அக். 25- இத்தீபாவளி திருநாளை ஆதரவற்ற சிறார்களும் கொண்டாடி மகிழும் வகையில் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் சுன் வெய் அவர்களை பேரங்காடிக்கு நேரடியாக  அழைத்துச் சென்று இவர்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்கித் தந்தார்.

சிலாங்கூர் மாநில ஜசெக  இளைஞர் பிரிவுத் தலைவருமான அவர்,  அச்சிறார்களை  ஏயியோன் செராஸ் செலாத்தான் பேரங்காடிக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பிய ஆடைகளை வாங்கிக் கொடுத்து அவர்களிடையே தீபாவளி குதூகலத்தை ஏற்படுத்தினார்.

விழாக் காலங்களில் ஆதரவற்ற  சிறார்களையும் கருத்தில் கொண்டு அவர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். இதன் வழி தாங்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படவில்லை என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் ஏற்படும் என்றார் ஓங் சுன் வெய்.

இச்சிறார்களுக்குப் புத்தாடைகளைத் தேர்வு செய்யும் பணியில் ஜசெக இளைஞர் பிரிவு உறுப்பினர்களும் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.