MEDIA STATEMENT

மரங்கள் விழும் பிரச்சனையைத் தீர்க்க RM400,000 ஒதுக்கீடு

24 அக்டோபர் 2024, 1:26 PM
மரங்கள் விழும் பிரச்சனையைத் தீர்க்க RM400,000 ஒதுக்கீடு

ஷா ஆலம்,அக் 24: அடுத்த ஆண்டு அதன் நிர்வாகப் பகுதியில் விழும் அபாயத்தில்

உள்ள மரங்களின் பிரச்சனையைத் தீர்க்க பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

(எம்பிபிஜே)மொத்தம் RM400,000 ஒதுக்கியுள்ளது.

மரங்கள் இளமையாகவும், அரை முதிர்ந்ததாகவும், முதிர்ந்ததாகவும் இருப்பதை கண்டு

உறுதி செய்வதே பயனுள்ள மற்றும் முறையான மேலாண்மை ஆகும் என பெட்டாலிங்

ஜெயாவின் மேயர் கூறினார்.

குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றியுள்ள சாலையில் விழும் உள்ள மரங்களை

நிர்வகிக்கும் பணி செக்ஷன் 14,செக்‌ஷன் 16,செக்‌ஷன் 17 மற்றும் SS2 இல்

மேற்கொள்ளப்படும்  என்று முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.

எம்பிபிஜே தலைமையகத்தில் உள்ள அனெக்ஸ் கட்டிடத்தில் நடைபெற்ற எம்பிபிஜே

சிறப்பு கவுன்சில் கூட்டத்தில் (பட்ஜெட் 2025) அவர் இவ்வாறு கூறினார்.

அதே நேரத்தில், மே 25 வரை 94 மரங்கள் மற்றும் 230 கிளைகள் விழுந்ததாக 98

புகார்கள் எம்பிபிஜேக்கு வந்ததாக முகமட் ஜாஹ்ரி தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.