ஷா ஆலம், அக் 22: இந்த நாட்டில் தீவிர வறுமையை எங்கு எந்த இனத்திலிருந்தாலும் வறுமையை ஒழிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஒருபோதும் எவரையும் அல்லது எந்த இனத்தையும் ஒதுக்கி, பாகுபாடுகள் காட்டவில்லை என்று டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.
பரம ஏழைகள் பெரும்பான்மையானவர்கள் பூமிபுத்ரா மலாய்க்காரர்கள் என்பது உண்மைதான், ஆனால் பரம ஏழைகள் பிரிவில், பரம ஏழ்மையால் கடும் பாதிப்பில் உள்ளதாக இந்திய சமூகம் இருக்கிறது.
"நான் ஒரு உதாரணம் சொல்கிறேன், எடுத்துக்காட்டாக, கோலாலம்பூரில் பெரும்பான்மையானவர்கள் (பரம ஏழைகளில்) மலாய்க்காரர்கள் இருந்தாலும், அவர்களை விட இந்திய பரம ஏழைகள் நிலையும் எண்ணிக்கையும் கவனத்தை ஈர்க்க வல்லதாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்".
"ஆனால் கோலாலம்பூரில் தீவிர வறுமையை ஒழிக்கும் போது, நாங்கள் இனத்தைப் மட்டும் பார்ப்பதில்லை". அதாவது, அனைத்து ஏழை சமூகங்களும் அல்லது மிகவும் ஏழைகளாக வகைப்படுத்தப் பட்டவர்களும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
"தீவிர வறுமை என்று அவர்கள் கூறும்போது அது உண்மையல்ல" (tidak babit semua kaum). தீவிர வறுமை பிரிவில் வரும் எவரும், அவர்கள் குடிமக்களாக இருக்கும் வரை, பாகுபாடு இல்லாமல் உதவ வேண்டும் "என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து எம். பி. எஸ். கேசவனின் கூடுதல் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைகள் மற்றும் கடுமையான ஏழைகள் பற்றிய சமீபத்திய தகவல்களையும் தரவுகளையும் பெறுவதற்காக நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளுடன் கலந்துரையாடல் அமர்வுகள் நடத்தப்பட்டதாகவும் அன்வர் கூறினார்.
இதுவரை, முதலமைச்சர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி உள்ளனர். காரணம் மத்திய அரசிடம் பெரிய ஒதுக்கீடுகள் உள்ளன, மாநில அரசுகளிடமும் ஒதுக்கீடுகள் உண்டு அவை சிறியது.
"இஸ்லாமிய மதக் கவுன்சில் மற்றும் மாநில அரசின் பல நலத் திட்டங்கள் மூலமாகவும் ஜக்காட்". எனவே நாங்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துள்ளோம் "என்று அவர் கூறினார்.








