MEDIA STATEMENT

பண்டமாரான், போர்ட் கிள்ளான் தொகுதிகளில் 950 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டுகள் விநியோகம்

21 அக்டோபர் 2024, 9:37 AM
பண்டமாரான், போர்ட் கிள்ளான் தொகுதிகளில் 950 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டுகள் விநியோகம்
பண்டமாரான், போர்ட் கிள்ளான் தொகுதிகளில் 950 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டுகள் விநியோகம்

(ஆர்.ராஜா)

கிள்ளான், அக். 21- தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு

ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்கும் நிகழ்வுக்கு பண்டமாரான்

மற்றும் போர்ட்கிள்ளான் தொகுதிகள் நேற்று ஏற்பாடு செய்திருந்தன.

பண்டமாரன் தொகுதி நிலையிலான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை

வழங்கும் நிகழ்வு இங்குள்ள, புக்கிட் திங்கி ஜயண்ட் பேரங்காடியிலும்

போர்ட் கிள்ளான் தொகுதி நிலையிலான நிகழ்வு பண்டமாரான் எக்கோன்

சேவ் பேரங்காடியிலும் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங்

தக் மற்றும் போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அர்மிஸாம் ஜமான்

ஹூரி ஆகியோருடன் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்

வீ.கணபதிராவும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பண்டமாரான் தொகுதியைச் சேர்ந்த 450 பேரும் போர்ட்

கிள்ளான் தொகுதியைச் சேர்ந்த 400 பேரும் தலா 200 வெள்ளி மதிப்புள்ள

தீபாவளி பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டனர்.

பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் இப்பேரங்காடிகளில்

பெருநாளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக்

கொண்டனர்.

இவ்விரு தொகுதிகளுக்கும் இவ்வாண்டு 170,000 வெள்ளி மதிப்புள்ள 950

இலவச பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலத்திலுள்ள 56

சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 200 வெள்ளி மதிப்பலான 22,000

ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்க மாநில அரசு 44 லட்சம்

வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.