MEDIA STATEMENT

புக்கிட் காசிங் தொகுதியில் 400 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டுகள் விநியோகம்- அரசின் உதவிக்கு பொதுமக்கள் நன்றி

20 அக்டோபர் 2024, 5:49 AM
புக்கிட் காசிங் தொகுதியில் 400 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டுகள் விநியோகம்- அரசின் உதவிக்கு பொதுமக்கள் நன்றி
புக்கிட் காசிங் தொகுதியில் 400 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டுகள் விநியோகம்- அரசின் உதவிக்கு பொதுமக்கள் நன்றி

பெட்டாலிங் ஜெயா, அக். 20-  தீபாவளியை முன்னிட்டு  புக்கிட் காசிங் தொகுதியைச் சேர்ந்த 400 குடும்பங்களுக்கு தலா 200 வெள்ளி மதிப்புள்ள  ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் நேற்று விநியோகிக்கப்பட்டன.

இங்குள்ள பிஜேஎஸ்2 மாத்தாஹாரி  பேரங்காடியில்  நடைபெற்ற இந்த நிகழ்வில்  புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பற்றுச் சீட்டுகளை ஒப்படைத்தார்.

இந்த பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி  பேரங்காடியில் தீபாவளிக்குத் தேவையான  அத்தியாவசியப் பொருள்களை அவர்கள் வாங்கிக் கொண்டனர்.

தீபாவளியைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும்  பொருளாதாரச் சுமையை  இந்த ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுத்  திட்டம்  ஓரளவு குறைக்கும் எனத் தாம் நம்புவதாக ராஜீவ் கூறினார்.

தீபாவளிக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு  இந்த நிதியுதவி தங்களுக்கு பெரிதும் துணை புரிந்ததாக  பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள் கூறினர்.

வசதி குறைந்தவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்தை அமல்படுத்தி வரும் மாநில அரசுக்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜீவுக்கும் தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட  தீபாவளி  ஜோம் ஷோப்பிங்  இலவச பற்றுச் சீட்டுகள் தீபாவளி பலகாரங்களைத் தயார் செய்வதற்குப் பேருதவியாக அமையும் என்று புக்கிட் காசிங் தொகுதியைச் சேர்ந்த   வசதி குறைந்தோர் தங்களின்  மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.