கோலாலம்பூர், அக். 19- அரசு ஊழியர்களுக்கு 500 வெள்ளியும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 250 வெள்ளியும் சிறப்பு உதவி நிதியாக வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த உதவித் தொகை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்படும் எனக் கூறிய அவர், ஒப்பந்தப் பணியாளர்கள் உட்பட கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழ் உள்ள ஊழியர்கள் இந்த உதவித் தொகை பெறுவர் என்றார்.
இது தவிர ஓய்வூதியம் பெறும் அல்லது ஓய்வூதியம் பெறாத இராணுவ வீரர்கள் உள்பட அனைத்து ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கும் 250 வழங்ப் படும் எனவும் அவர் தெரிவித்தார்.








