MEDIA STATEMENT

சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு வெ.550 கோடி ஒதுக்கீடு

18 அக்டோபர் 2024, 12:53 PM
சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு வெ.550 கோடி ஒதுக்கீடு

கோலாலம்பூர், அக். 18- சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 550 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

வரும் 2026ஆம் ஆண்டு அனுசரிக்கப்படவிருக்கும் மலேசியாவுக்கு வருகை தாருங்கள் ஆண்டிற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

சுற்றுலாத் தளங்களை மேம்படுத்துவது, சூழியல் சுற்றுலா ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், மற்றும் கலாசார நிறுவனத்தின் நியமனத்தை ஆதரிப்பது ஆகிய நோக்கங்களுக்காக 11 கோடி வெள்ளி ஒதுக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

ஜோகூர் மாநிலத்திலுள்ள எண்டாவ் ரொம்பின் தேசிய பூங்கா, திரங்கானுவில் உள்ள ரெடாங் தீவு சரவா மாநிலத்தின் டுசுன் பெங்கெனு கடற்ரை ஆகியவற்றை மேம்படுத்துவதும் இதில் அடங்கும் என்றார் அவர்.

கோலாலம்பூரை கலாசார மற்றும் படைப்பாற்றல் நகரமாக நிலைநிறுத்துவதற்கும் ஏதுவாக சுல்தான் அப்துல் சமாட் கட்டிடம் மற்றும் கார்க்கோசா ஸ்ரீ நெகாராவை புனரமைப்பு செய்ய கசானா நேஷனல் 0 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்யும் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.