ஷா ஆலம், அக். 18- நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கும் பராமரிப்பதற்கும் 200 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்து தேசிய மாதிரி பள்ளிகளிலும் பழுதடைந்த வகுப்பறைகளை சீரமைக்க 100 கோடி வெள்ளி மானியமாக வழஙகப்படுவதாகவும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த மானியத்தின் கீழ் உதவி பெறும் பள்ளிகளில் தேசிய, சீன, தமிழ், சமயப் பள்ளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகளும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் குறிப்பாக சபா மற்றும் சரவாவில் மோசமான நிலையிலுள்ள 543 பள்ளிகளை தரம் உயர்த்துதற்கு 100 கோடி வெள்ளி ஒதுக்கப்படும். என்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்து வரும் கல்வித் துறைக்கு அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தித்ல மிக அதிகமாக அதாவது 6,410 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் சொன்னார்.








