ஷா ஆலம், அக்டோபர் 18: முதல் முறையாக வீட்டு உரிமையை ஊக்குவிப்பதற்காக வீட்டுக் கடன் வட்டி செலுத்துதல்களுக்கு RM7,000 வரை வரி நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
500, 000 வரை விலை கொண்ட வீடுகளுக்கு RM7,000 வரை வரி நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதற்கிடையில், RM500,000 முதல் RM750,000 வரை விலை கொண்ட குடியிருப்புகளுக்கு RM5,000 வரை வரி நிவாரணம் வழங்கப்படுகிறது.
"ஜனவரி 1,2025 முதல் டிசம்பர் 31,2027 வரை முடிக்கப்பட்ட விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்களில் தொடர்ச்சியாக மூன்று மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு இந்த விலக்கு கோரப் படலாம்" என்று அவர் இன்று மக்கள் சபையில் 2025 பட்ஜெட்டை முன்வைத்த போது கூறினார்.








