MEDIA STATEMENT

இவ்வாண்டு சிலாங்கூர் பட்ஜெட் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும், TMS2025 பிரச்சாரத்தை வெற்றி பெறச் செய்ய உதவும்

16 அக்டோபர் 2024, 3:17 AM
இவ்வாண்டு சிலாங்கூர் பட்ஜெட் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும், TMS2025 பிரச்சாரத்தை வெற்றி பெறச் செய்ய உதவும்

சிப்பாங், அக்டோபர் 16: சிலாங்கூர் பட்ஜெட் 2025 மூலம் சுற்றுலாத் துறையை  மேம்படுத்துவதை மாநில அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது, இது சிலாங்கூருக்கு வருகை புரியுங்கள் பிரச்சாரம்  2025 தை வெற்றிகரமாக  முன்னெடுக்கிறது.

எட்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைய, சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சுற்றுலாத்துறை பொறுப்பு  ஆட்சிக்குழு உறுப்பினர்  'இங் சுவி லிம் கூறினார்.

சிலாங்கூருக்கு வருகை புரியுங்கள் "TMS 2025 இன் வெற்றியை உறுதி செய்வதற்காக வரவிருக்கும் பட்ஜெட்டில்  மந்திரி புசாரின் தலைமை சிறந்த  ஆலோசனைகளை (முன் முயற்சிகளை) வழங்கும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

இங்குள்ள சிப்பாங் இன்டர்நேஷனல் சர்க்யூட் மீடியா சென்டரில் நேற்று நடைபெற்ற மோட்டோ ஜி பி 2025  சாம்பியன்ஷிப் போட்டிகள் உடன் இணைந்து டிஎம்எஸ் 2025 விளம்பர ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக சம்பந்தப்பட்டவர்களின் முந்தைய சிலாங்கூர் பட்ஜெட் 2025 உரையாடல் அமர்வின்  கண்ட குறை / நிறைகளை மாநில அரசு கவனத்தில் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

"இந்த ஈடுபாடு அமர்வின் கண்டுபிடிப்புகள் முக்கியமானது, ஏனெனில்  மலேசியாவின் சுற்றுலா துறையில் ஒரு முன்மாதிரி மாநிலமாகவும்  முன்னணியில்  உள்ளதை, சிலாங்கூர்   பராமரிக்க விரும்புகிறது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, மாநில நிர்வாகம் எட்டு மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை சிலாங்கூருக்கு கவர  இலக்கு வைத்தது, இது டி. எம். எஸ் 2025 உடன் இணைந்து 60 க்கும் மேற்பட்ட திட்டங்களை வழங்குகிறது.

இப் பிரச்சாரத்தை மேலும் ஊக்குவிக்க, சிலாங்கூர் சபாக் பெர்ணாமில் நெல் உழவர் திருவிழா ஏற்பாடு செய்து வருகிறது, இது இந்த நவம்பரில் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு உற்சாகமான நடவடிக்கைகளால் நிரம்பியுள்ளது.

ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி, டி. எம். எஸ் 2025 புத்தாண்டு கொண்டாட்டத்துடன் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு  மந்திரி புசாரால்  ் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.