MEDIA STATEMENT

தொழில்துறையின் தேவையை ஈடு செய்ய பயிற்சித் தாதியர் சேர்ப்பு இரட்டிப்பாக்கப்படும்

13 அக்டோபர் 2024, 2:01 AM
தொழில்துறையின் தேவையை ஈடு செய்ய பயிற்சித் தாதியர் சேர்ப்பு இரட்டிப்பாக்கப்படும்

கோத்தா கினபாலு, அக். 13- பயிற்சித் தாதியரின் எண்ணிக்கையை

இவ்வாண்டு தொடங்கி சுகாதார அமைச்சு இரட்டிப்பாக்க உள்ளது. இதன்

வழி தற்போது தற்போது 1,000 பேராக இருந்து வரும் அந்த எண்ணிக்கை

வரும் ஆண்டுகளில் 2,000ஆக உயர்த்தப்படும்.

தொழில்துறையின் தேவையை ஈடு செய்வதற்கு ஏதுவாக பதிவு பெற்ற

தாதியரின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை

எடுக்கப்படுவதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ லுக்கானிஸ்மான்

அவாங் சவுனி கூறினார்.

சபாவில் உள்ள இளையோரிடம் இருந்து அதிக விண்ணப்பங்கள் கிடைத்து

வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், மருத்துவ உதவியாளர் துறையில் ஆண்

தாயாருக்கான கோட்டா மற்றும் பல்லின மக்களின் பங்கேற்பை

அதிகரிப்பதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர்

தெரிவித்தார்.

மருத்துவ மற்றும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகளில் சபாவைச்

சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கில்

இத்தகைய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என

அவர் குறிப்பிட்டார்.

2022-2024 ஆம் தவணைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கு

ஒதுக்கப்பட்ட கோட்டாவில் 65 விழுக்காட்டை தீபகற்ப மலேசியா பூரத்தி

செய்த வேளையில் 18 விழுக்காட்டை சபாவும் 17 விழுக்காட்டை

சரவாவும் நிறைவு செய்தன என்றார் அவர்.

ஆகவே, இதன் அடிப்படையில் அதிகமான தாதியரை உருவாக்குவதற்கு

ஏதுவாக கூடுதலான இளைஞர்களுக்கு இத்துறை தொடர்பான

பயிற்சிகளை வழங்குவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு

வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு சபா மாநில பிராந்தியத்திற்கான சுகாதார அமைச்சின்

மருத்துவ பயிற்சிக் கழகத்தின் 2024 பட்டமளிப்பு விழாவை தொடக்கி

வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.