(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று
மேலும் ஐந்து இடங்களில் நடை பெறவுள்ளது.
வாங்குவதற்குரிய வாய்ப்பை வழங்கும் இந்த ரஹ்மா விற்பனை இன்று
காலை 10.00 மணி தொடங்கி புக்கிட் அந்தாரா பங்சா, சுங்கை பீலேக்,
மோரிப், பண்டார் பாரு கிள்ளான், காஜாங் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில்
நடைபெறவிருக்கிறது. மலிவு விற்பனை நடைபெறும் இடங்களின்
பட்டியல் கீழே விளக்கப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் செகி ப்ரெஷ் பேராங்காடிகளில் நடைபெறும் மலிவு
விற்பனையுடன் சேர்த்து இவ்வாண்டில் மாநிலம் முழுவதும் 1,800க்கும்
மேற்பட்ட இடங்களில் ஏஹ்சான் ரஹ்மா விற்பனையை நடத்த சிலாங்கூர்
மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.
மேலும், பத்து ஏஹ்சான் செகி ஃப்ரெஷ் கிளைகளை திறக்கவும்
பி.கே.பி.எஸ். திட்டமிட்டுள்ளது. இந்த பேரங்காடியின் முதலாவது கிளை
பெர்ணம் ஜெயா, பாகான் நக்கோடா ஓமாரில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம்
முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு
விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர்
பயனடைந்துள்ளனர்.
மற்றும் முட்டையை மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை
செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்
பெற்றது.
பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள
கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது
http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து
கொள்ளலாம்.








