MEDIA STATEMENT

பத்துமலை இந்தியர் செட்டில்மெண்ட்  நில விவகாரத்திற்கு நல்ல தீர்வு, அவர்களின் அந்த நிலத்தை மதிப்புமிக்க சொத்தாக்கும்!

12 அக்டோபர் 2024, 12:20 PM
பத்துமலை இந்தியர் செட்டில்மெண்ட்  நில விவகாரத்திற்கு நல்ல தீர்வு, அவர்களின்  அந்த  நிலத்தை  மதிப்புமிக்க   சொத்தாக்கும்!
பத்துமலை இந்தியர் செட்டில்மெண்ட்  நில விவகாரத்திற்கு நல்ல தீர்வு, அவர்களின்  அந்த  நிலத்தை  மதிப்புமிக்க   சொத்தாக்கும்!

பத்துமலை அக் 12, கடந்த மூன்று நாட்களாக பத்துமலை இந்தியர் கிராமம் அல்லது இந்தியர் செட்டில்மெண்ட்  நில விவகாரம் குறித்து உலாவரும்  காணொளி மற்றும் குற்றச்சாட்டுகளை ஆராய மீடியா சிலாங்கூர்  பத்திரிகை இன்று களமிறங்கியது.

அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்

1, நில அலுவலகம் வழங்கிய வெளியேற்ற  கடிதம் தீபாவளி பண்டிகையை ஒட்டிய காலத்தில் குறுகிய காலக்கெடு  கொண்ட  வெளியேற்ற கடிதம்.

2. நாங்கள் நீண்ட காலமாக குடியிருக்கும், எங்கள் நிலப் பட்டா 2046 ம் ஆண்டு வரை  உயிர் உள்ளது, அப்படியிருக்க ஏன் வெளியேற வேண்டும்,  உரிமமின்றி  நிலத்தை ஆக்கிரமிப்பதாக எப்படிக் கூற முடியும்?

3. நில சர்வே செய்ய வேண்டி  வசூலித்த 1050 வெள்ளிக்கு ரசீதும்  இல்லை , நில வரை படமும் கிடைக்கவில்லை

4.இங்கு வாழ்பவர்கள் அனைவரும் வயதானவர்கள் , அல்லது உடல் குறைபாடுகளுக்குச் சிகிச்சை பெறுபவர்கள் , வீடுகளை  உடைத்தால் எங்கே போவார்கள் என்பதாகும்.

அங்கே எழுந்துள்ள பிரச்சனைக்கு  மூல காரணம் ஒருவரை ஒருவர் நம்பாததும்,  சிலருக்கு சரியான விளக்கம் ,சரியான தகவல், கிடைக்காததும்  மூல காரணமாக உள்ளது.  அங்கு  ஏற்படும்  வெள்ள பிரச்சனைக்கும் , சாலைக்கு தீர்வு காணவும்  அங்கு வாழும் பெரும்பாலான மக்கள்  முழு அளவில்   பயன்  பெற  அரசாங்கம்   முன்னெடுத்துள்ள  அக் கிராம நில  மறுசீரமைப்பு   தேவை  என்பதை  பெரும்பாலான மக்கள்  ஏற்றுக் கொள்கிறார்கள்

11/10/2024  வெள்ளிக்கிழமை  காலை மீடியா சிலாங்கூர் அங்கு இறங்கி மக்களின் கருத்துக்களை அறிய  முற்பட்ட வேளையில் , அங்கு வந்திருந்த கோம்பாக் நில அலுவலக அதிகாரிகள் , புதிய அல்லது மாற்று அறிவிப்பு கடிதங்களை வழங்கிக் குடியிருப்பாளர்களுக்கு விளக்கம்  அளிப்பதையும்  காண முடிந்தது.  அந்த புதிய கடிதம் தீபாவளி தருணத்தில்  வீட்டை விட்டு வெளியேற்றும்  ஆணையை திரும்பப் பெற்றுக் கொண்டு, மேலும்  இரண்டு  மாத கால கூடுதல் அவகாசம்  வழங்கியிருந்தது. அதன்படி  நில அலுவலக அறிக்கை  பெற்றுக் கொண்ட நாளில் இருந்து 60 நாட்களில் அவரது வீட்டை பிரித்து எடுக்க வேண்டும்   என   அதில்  குறிப்பிட்டிருந்தது..

மீடிய சிலாங்கூர்  அங்கு மேற்கொண்ட  ஆய்வில்   வீட்டுடமையாளர்கள் சிலர் கூறிய கருத்துகள் செய்திகளாக வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.