பத்துமலை அக் 12, இப்போது பத்துமலை இந்தியர் செட்டில்மெண்ட் குடியிருப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் திரு மணியம் 84 வயது அங்குள்ள மக்களுக்கு 86 ம் ஆண்டுகளில் அறுபது ஆண்டுகால நிலப் பட்டாவுக்கான கோரிக்கையை முன்னெடுத்ததும் , இப்பொழுது அங்குள்ள மக்களுக்கு 99 ஆண்டுகால பட்டாவுக்கும் கோரிக்கைகளை முன் வைத்ததும் தானே என்றார்.
எங்களுக்கு 60 ஆண்டுகால பட்டா உண்டு என்று மார் தட்டுபவர்கள், அந்த பட்டாவுக்கு அன்று உழைத்த நான், எப்படி இன்று உங்களை கைவிடுவேன்? எனக் கேட்டார்.
ஆக
இப்பொழுது 99 வருட காலத்திற்கு நில உரிமம் வழங்கும் 5A நில உறுதி பத்திரம் வழங்கப்பட்டு விட்டது . ஆனால் சர்வேயில் காண்பிக்கப்பட்ட இடத்தில் வீடுகளை கட்டினால் மட்டுமே 99 ஆண்டுக்கான நில உரிமம் முழுமை பெறும்.
ஆகவே , அனைவரும் ஒன்றுபட்டு நம் உரிமையை நிலைநாட்ட வேண்டிய நேரத்தில் , பல லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள சொத்து கைநழுவிட விட்டு விடக்கூடாது என கேட்டுக் கொண்டார்
நில சர்வேக்கு கட்டிய 1050 வெள்ளிக்கு ரசீதும் இல்லை, நில வரை படமும் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் வண்ணம் , 11/10/ 2024 அன்று கோம்பாக் மாவட்ட நில அலுவலகம் வீடு உடைக்க அதன் காலக்கெடுவை நீட்டிபதற்கான நோட்டிஸ் வழங்க வந்த போது, அந்த நிலத்தை சர்வே செய்த நிறுவனம் தயார் செய்திருந்த நில சர்வே படத்தை எடுத்து வந்திருந்தனர்.
அதன்படி ஆட்சேபனை தெரிவித்த குடியிருப்பாளர்களின் வீட்டுக்கு மாற்று இடம் எங்கு அமைந்திருக்கிறது என்பதும் அடையாளம் காட்டப் பட்டது. ஆகவே சர்வே செய்யவில்லை என்று சொல்வது தவறு.
மேலும் பத்துமலை இந்தியர் செட்டில்மெண்ட் குடியிருப்பாளர் சங்கம் எவரிடமிருந்தும் சர்வேக்கு பணம் வசூலிக்க வில்லை . நிலச் சொந்தக்காரர்கள் நில சர்வேக்கான கட்டணத்தை நேரடியாக நில சர்வே செய்த நிறுவனத்திடம் செலுத்தினர் என பத்துமலை இந்தியர் செட்டில்மெண்ட் தலைவர் திரு. மணியம் கூறினார்
நம் இந்தியர்களிடம் ஒற்றுமை வேண்டும். அன்று கூட்டாக ஒரு முடிவு எடுத்தோம், அதன்படி நாம் அனைவருக்கும் 99 ஆண்டு கால நிலப் பட்டா வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தோம். அதில் நல்லதொரு வீட்டை கட்டி நாம் குடியேற வேண்டும், இங்கே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.
இடையில் ஏன் திசை மாற வேண்டும் ? எனக் கேட்டார்
இப்பொழுது உள்ள அரசாங்கம் மக்கள் மீது கரிசனம் கொண்டது. இப்பொழுது இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் டத்தோ ஸ்ரீ அமிருடின் பதவியில் இருக்கும் போதே நாம் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஒப்புக் கொண்டதால் , அனைவரும் ஒன்று சேர்ந்து கையொப்பமிட்டோம்.
இப்பொழுது நமக்கு 99 வருட காலத்திற்கு உரிமம் வழங்கும் 5A நில உறுதி பத்திரம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், இப்பொழுது வீடுகளை காலி செய்து வெளியேறினால் மட்டுமே நில அலுவலகம் அடுத்தக்கட்ட வேலைகளை செய்ய முடியும் என்றார்.
வேறு ஒருவர் இங்கு அல்லது வேறு கட்சி சிலாங்கூர் மாநிலத்தில் பதவிக்கு வந்தால் அவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் காட்டும் அதே கரிசனத்தை பத்துமலை இந்தியர் செட்டில்மெண்ட் வாழும் இந்தியர்கள் மீது காட்டுவார் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆக, அவர்கள் மாற்று திட்டத்தைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியமில்லை.
ஆகையால் மாநில அரசு நமக்கு வழங்கி விட்ட 99 ஆண்டுகாலப் பட்டாவிற்கு உயிர் கொடுப்பதும், அதை செல்லாதா காகிதமாக்குவதும் நம் கைகளில் உள்ளது. அந்த நிலப் பட்டாவுக்கு உயிர் கொடுக்க நாம் நமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி குடியேற நில அலுவலகம் அதற்கான பணிகளை செய்ய நாம் ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்தது என்றார்








