MEDIA STATEMENT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய  தன்னார்வலர்கள் உதவுகிறார்கள்.

6 அக்டோபர் 2024, 1:02 PM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய  தன்னார்வலர்கள் உதவுகிறார்கள்.

ஷா ஆலம், 6 அக்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமான சேதமடைந்த பொருட்களை சுத்தம் செய்வதற்கும் அகற்றுவதற்கும் சிலாங்கூர் தன்னார்வக் குழுவினர் உதவுகிறார்கள். பாதிகப்பட்டவர்களின் நலனை பாதுகாக்கவும் கவனிக்கவும்  தன்னார்வலர்கள்  மூலம்  அரசு உதவி  வருகிறது.

வெள்ளத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகளுக்கு உதவவும், பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியில், சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளை அல்லது எம்பிஐ இறங்கியுள்ளது டன், அன்றாட, அவசர, அடிப்படை தேவைகளுக்கான  உதவிகளையும் வழங்கி  வருவதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

மாநில அரசு இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின்   நலனை  பாதுகாக்கும்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு அமிருடின் செகோலா கெபாங்சான் புக்கிட் பாடோங், பெஸ்தாரி ஜெயா மற்றும் எஸ் கே தேச அமான் கோல்ஃபீல்ட்ஸ் ஆகிய தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) உள்ள 600க்கும் மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட நேரம் எடுத்துக் கொண்டார்.

" வானிலை அனுமதித்தால், பி பி எஸ் எஸ் கே டேச அமானில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு மூன்று தினங்களுக்கு பிறகு இன்று  திரும்பலாம்," என்றும் அவர் கூறினார்.

இன்று காலை நிலவரப்படி, பேரிடர் EXCO நஜ்வான் ஹலீமி 213 குடும்பங்களைச் சேர்ந்த 909 பேர்  இன்னும் ஆறு  தற்காலிக தங்குமிடங்கள்  தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

நேற்று இரவு 232 குடும்பங்களைச் சேர்ந்த 975 பேருடன் ஒப்பிடும்போது கோலா சிலாங்கூர், கோம்பாக் மற்றும் பெட்டாலிங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.