சுங்கை சிப்புட், 6 அக்: நாட்டில் எந்த இனத்தையும் ஓரங்கட்டாமல், பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சி நிரல் நியாயமான முறையில் செயல்படுத்தப்படுகிறது என்கிறார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
இந்தியர்களின் பொருளாதாரத்தை வலுவூட்டலும் இதில் அடங்கும் என்று நிதி அமைச்சர் கூறினார்.
“இதையெல்லாம் நாங்கள் (அரசாங்கம்) செய்ய எதையும் எதிர்பார்ப்பதில்லை, இதற்கெல்லாம் பாராட்டுகளுக்கோ, தூற்றல்களுக்கோ நாம் கவலை படுவதில்லை.
ஆனால் , எல்லா மக்களின் நலவாழ்வில் இந்த அரசாங்கம் அக்கறையுடன் செயல்படுகிறது திட்டங்களை செயல்படுத்துகிறது.
கே.எஸ்.என் (அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர்) அமைச்சரவைக் கூட்டத்தில் இருக்கிறார். கூட்டத்தில் ஏழைகள் என்று சொன்னால் அனைவருக்கும் என்றுதான் அர்த்தமா? இல்லையா ?” என்று அவரை கேளுங்கள் என இன்று ஈவூட் தேசிய வகை தமிழ்ப்பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது கூறினார்.
பேராக் மந்திரி புசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் மற்றும் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
அரசாங்கம் அனைத்து இனங்களுக்கும் நியாயமானது தேசிய வணிகக் குழு பொருளாதார நிதி (TEKUN) திட்டத்தின் மூலம் ஒதுக்கீடுகளை வழங்குகிறது, அதே சமயம் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ரா மக்களுக்கு உதவுவதற்கு முன்பு 100 சதவீதமாக இருந்த அமானா இக்தியார் மலேசியா (ஏஐஎம்) இந்தியர்களுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது.
“ஏழை இந்திய சமூகத்திற்கு இடம் கொடுப்பதில் என்ன தவறு என்று நான் கேட்டேன், அவர்களை அழைத்து பயிற்சி அளித்து அவர்களுக்கு (தொழில்) வாய்ப்புகளை கொடுங்கள் '' என்றேன்.
"தீபகற்பத்தில், எத்தனை ஏழைகள் உள்ளனர்? மலாய்க்காரர்கள் உண்டு, ஆனால் ஏழ்மையான சமூகத்தின் பிரிவில் இந்தியர்களும் உள்ளனர், அவர்கள் குடிமக்கள், எங்கள் மக்கள்...பிரதமராக அவர்களுக்கு உதவுவது எனது பொறுப்பு " என்று அவர் வலியுறுத்தி கூறினார்.
இதற்கிடையில், வோங் தனது உரையில், RM13.19 மில்லியன் செலவில் 2.4 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்ட SJKT ஈவூட் கடந்த மார்ச் 11ஆம் தேதி முதல் செயல்படுகிறது, அது பல பொது பயனீட்டு அறைகள், சிறப்பு பாட மையங்களுடன் 12 வகுப்பறைகளும் கொண்டுள்ளது என்றார்
- பெர்னாமா








