MEDIA STATEMENT

பேராக்கில் வெள்ளத்தினால் வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு  சிலாங்கூரில் குறைகிறது

6 அக்டோபர் 2024, 7:31 AM
பேராக்கில் வெள்ளத்தினால் வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு  சிலாங்கூரில் குறைகிறது

கோலாலம்பூர், அக்டோபர் 6 - பேராக்கில் வெள்ளத்தில் இருந்து  வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் சிலாங்கூரில் சிறிது குறைந்துள்ள வேளையில் கெடாவில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

பேராக்கில், நேற்று இரவு பதிவான 43 குடும்பங்களில் இருந்து 136 பேர் இருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 77 குடும்பங்களில் இருந்து 231 பேர் வெள்ளத்தினால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

உலு பேராக் மாவட்டத்தில் நள்ளிரவில் இரண்டு புதிய நிவாரண மையங்கள் திறக்கப் பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்தது, அதாவது எஸ்.கே.ஸ்ரீ அதிக்கா ராஜா வில், எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் மற்றும் எஸ்.எம்.கே. கிரிக் (26 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேர்), . இதுவரை ஆறு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

கிரியான் மாவட்டத்தில், இரண்டு நிவாரண மையங்கள், எஸ்.கே.சங்கட் லோபாக் 12 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் மற்றும் எஸ்.கே.பாரிட் ஹாஜி அமான் பாகன் சிராய் (10 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர்), தைப்பிங், எஸ்.கே. மாத்தாங் குளுகோர், மாத்தாங் ஆகிய இடங்களில் 45 பேர் வசிக்கும் இரண்டு மையங்கள் திறக்கப்பட்டன. 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் எஸ்.கே. மாத்தாங் (எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர்).

இதற்கிடையில் மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் படி, பேராக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரில், வெள்ளத்தினால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை 213 குடும்பங்களில் இருந்து 909 ஆக குறைந்துள்ளது, இது நேற்றிரவு 232 குடும்பங்களில் இருந்து 975 ஆக இருந்தது.

ஜே.கே,எம் பேரிடர் தகவல் மைய InfoBencana JKM போர்ட்டலின் படி, ஆறு நிவாரண மையங்களில் ஷா ஆலம், கோம்பாக் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மையங்கள் பள்ளிகள், மாவட்ட மற்றும் நகராண்மை கழகங்களின் டேவான்  ஆகும்,  செலாயாங் ஸ்ரீ குண்டாங், பாலாய் ராயா கம்போங் மிலாயு ஸ்ரீ குண்டாங், எஸ் கே டேச அமான்,  டேவான் கெனாங்கா, பெஜாபாட் டையேரா டான் தானா பெட்டாலிங்,  எஸ்கே இஜோக் மற்றும் எஸ் கே புக்கிட் பாடோங். ஆகியவை.

இதற்கிடையில், கெடாவில், குபாங் பாசுவில் உள்ள SMK சாங்லுனில் நிவாரண மையம் அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்பட்டது, அதில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் தங்கியுள்ளனர் என்று மாநில குடிமைத் தற்காப்புப் படையின் துணை இயக்குநர் மேஜர் (PA) முஹம்மது சுஹைமி முகமது ஜைன் தெரிவித்தார்.

“நேற்று மதியம் முதல் பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் நங்மா, கம்போங் பெலகாங் செகோலா டத்தோ கெம்பாரா மற்றும் கம்போங் குபாங் காயூ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கெடாவில் உள்ள சுங்கை கெடா ஆற்றில் நீர் ஆபத்து அளவுகளை தாண்டியுள்ளதாக Public Infobanjir இணையதளம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.