சிரம்பான், செப்.30 - லாரிகள் உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுனர்கள் விதிமுறைகள் கடைப்பிடிப்பதையும், போதையில் வாகனம் ஓட்டாமல் இருப்பதையும் உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து அமைச்சு ஒருங்கிணைந்த செயல்பாட்டை தொடர்ந்து விரிவுபடுத்தும்.
சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) முன்பு எக்ஸ்பிரஸ் மற்றும் சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள் குறிவைத்து பல சோதனைகளை மேற்கொண்டு. அதில் பல ஓட்டுநர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது என போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
"இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு பிரச்சனை ஆகும். நாங்கள் கடந்த இரண்டு மாதங்களில் ஓர் ஒருங்கிணைந்த செயல்பாட்டைத் தொடங்கினோம். இப்போது நாங்கள் வணிக மற்றும் கனரக வாகனங்களில் கவனம் செலுத்துகிறோம். இந்த கனரக வாகனங்களை ஓட்டுபவர்கள் விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய கடுமையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். .
இம்மாவட்டத்தில் அண்மையில் இரண்டு லாரிகள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் காவல்துறையினரின் விசாரணைகளின் அடிப்படையில், லாரி ஓட்டுனர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப் பட்டது.
இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரின் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கபப்டும் என்பதை லோக் மீண்டும் நினைவுபடுத்தினார்.
ஏனெனில், நிறுவன உரிமையாளர்கள் தங்கள் ஓட்டுனர்கள் விவேகமானவர்களாகவும், உரிமம் மற்றும் பதவியை துஷ்பிரயோகம் செய்யாமலும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.
- பெர்னாமா








