MEDIA STATEMENT

காஜாங்கில் வரும் ஞாயிறன்று மலேசியா மடாணி மினி சுகாதார விழா- கவுன்சிலர் சங்கீதா தகவல்

27 செப்டெம்பர் 2024, 8:57 AM
காஜாங்கில் வரும் ஞாயிறன்று மலேசியா மடாணி மினி சுகாதார விழா- கவுன்சிலர் சங்கீதா தகவல்

ஷா ஆலம், செப். 27- மலேசியா மடாணி மினி சுகாதார விழா இம்மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  பண்டார் டெக்னோலஜி காஜாங் சமூக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின், பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷியாரெட்சான் ஜோஹான் , காஜாங் நகராண்மைக் கழகத் தலைவர் நஸ்லி முகமது தாய்ப் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளரான சி.சங்கீதா கூறினார்.

இந்த நிகழ்வில் இலவச மருத்துவப் பரிசோதனை, இலவச எச்.எம்.வி. தடுப்பூசி, கண்பாரிசோதனை, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ச் சோதனை, பல் சோதனை ஆகியவற்றோடு செனாம்ரோபிக், சிறார்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, அதிர்ஷ்டக் குலுக்கு, இலவச மூக்கு கண்ணாடி வழங்குதல், வங்கி கணக்குத் திறப்பு முகப்பிடம் ஆகிய சேவைகளும் வழங்கப்படும் என்று காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் திரளாக க கலந்து பயன்பெறுமாறு காஜாங் வட்டார பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.