ஷா ஆலம், செப். 27: சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் (பி.பி.ஏ.எஸ்.) கீழ் தற்போது எட்டு நடமாடும் நூலகங்கள் உட்பட மொத்தம் 105 நூலகங்கள் உள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு இந்த நூலகங்களின் எண்ணிக்கை 86ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியிருப்பாளர்கள் வாசிப்புக்கு தேவையான நூல்களை இலகுவாகப் பெறுவதற்கு ஏதுவாக இரண்டு மக்கள் வீடமைப்புத் திட்டங்களில் மேலும் இரு நூலகங்கள் எதிர்காலத்தில் கட்டப்படும் என்று நூலகக் கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது கூறினார்.
கடந்த 2008 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 86 நூலகங்கள் மட்டும் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை இது 105 ஆக உயர்ந்துள்ளது. இந்த நூலகங்கள் அனைத்தும் வருகையாளர்களின் தேவைக்கேற்ப பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளன என்று அவர் சொன்னார்.
வேலை செய்யும் பெற்றோர்களின் வசதிக்காக மிக அண்மையில் நாங்கள் இடை மாற்ற இலவச போக்குவரத்து சேவையை ஏற்படுத்தியுள்ளோம். இது அவர்களின் பிள்ளைகளுக்கு இரண்டாவது வீடாக மாறுவதற்கும் உதவும் என்று அவர் கூறினார்.
அனைத்து வயதினரையும் நூலகத்திற்கு வரவழைக்கவும் சமூகத்தினரிடையே வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கவும் நாங்கள் எப்போதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறோம் மஸ்துரா தெரிவித்தார்.
ஷா ஆலம் செக்சன் 13 இல் உள்ள துன் ராஜா ஊடா நூலகம் பலரின் விருப்ப இடமாக உள்ளது. கடந்த 2022 ஜூலை மாதம் திறக்கப்பட்டது முதல் இப்போது வரை 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இங்கு வந்துள்ளனர்.
நாங்கள் நூலக சேவைகளை விரிவுபடுத்த விரும்புகிறோம். இதன் வழி வீட்டைத் தவிர மற்றொரு விருப்ப இடமாகவும் பொருளாதாரத்தை இயக்கக்கூடிய தளமாகவும் நூலகம் மாறும். அதனால் அங்கு பல்வேறு வசதிகளை செய்து தருகிறோம் என்றார் அவர்.
நவீன தொழில்நுட்பத்தின் சகாப்தத்தில் நுழைந்தாலும், நூலகம் அதன் உண்மையான மற்றும் நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் முக்கிய தேர்வாக உள்ளது என்றார்.
"ஆம், நாங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் நுழைகிறோம். இருப்பினும், ஏராளமான தகவல்களையும் அறிவையும் நூலகத்தில் காணலாம். எனவே இந்த நூலகம் இந்த நேரத்தில் பொருத்தமானதாக உள்ளது







