MEDIA STATEMENT

 புக்கிட் பிந்தாங் மோனோ ரயில் நிலையத்தில் அத்துமீறிய நபருக்கு வலைவீச்சு

27 செப்டெம்பர் 2024, 7:38 AM
 புக்கிட் பிந்தாங் மோனோ ரயில் நிலையத்தில் அத்துமீறிய நபருக்கு வலைவீச்சு

கோலாலம்பூர், செப் 27- இரண்டு நாட்களுக்கு முன்பு புக்கிட் பிந்தாங் மோனோ ரயில் நிலையத் தண்டவாளத்தை தாண்டிய நபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் சம்பந்தப்பட்ட நான்கு வினாடி வீடியோ செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) சீன சமூக ஊடகமான Xiaohongshu இல் பதிவேற்றம் செய்யப்பட்டது என்று டாங் வாங்கி காவல்துறை தலைவர் ஏசிபி சுலிசிமி அவாண்டி சுலைமான் கூறினார்.

“சம்பவம் தொடர்பான அறிக்கை பிரசாரனா  உதவி காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது.

"சந்தேக நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 447வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தகவல் தெரிந்தவர்கள் டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-26002222, கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-21159999 என்ற எண்ணிலும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.