MEDIA STATEMENT

கிள்ளானில் தீபாவளி சந்தை- நாளை குலுக்கல் முறையில் கடைகள் தேர்வு

25 செப்டெம்பர் 2024, 10:46 AM
கிள்ளானில் தீபாவளி சந்தை- நாளை குலுக்கல் முறையில் கடைகள் தேர்வு

(ஆர்.ராஜா)

 கிள்ளான், செப். 25- கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி.கே.)

ஏற்பாட்டில் இங்குள்ள லிட்டில் இந்தியாவில் நடைபெற இருக்கும்  தீபாவளி சந்தையை முன்னிட்டு   குலுக்கல் முறையில் கடைகள் தேர்வு செய்யும்  பணி நாளை செப்டம்பர் 26ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

மாலை 3.00 மணிக்கு தொடங்கும் இந்த குலுக்கல் முறையிலான தேர்வு கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் முகநூல் மற்றும் யுடியூப் காணொளி வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு பண்டிகை தொடர்பான பொருட்களை விற்பதற்கு 52 கடைகளும் பட்டாசுகள் விற்பதற்கு 16 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகர் மன்றம் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வியாழக்கிழமை

கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர்

17 முதல் 30 வரை லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளி சந்தைக்கு

எம்.பி.டி.கே. ஏற்பாடு செய்துள்ளது.

கடைகள் குலுக்கல் முறையில்   தேர்ந்தெடுக்கப் பட்டப் பின்னர் அக்டேபார் 17 தொடங்கி இரு வாரங்களுக்கு  வியாபாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு கிள்ளான், லோரோங் திங்காட் மற்றும் ஜாலான் தாலி ஆயரில் மொத்தம் 153 கடைகள் சிறு வியாபாரிகளுக்கு வழங்கப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.