MEDIA STATEMENT

பச்சிளம் பாலகர்கள் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்- கோத்தா கினபாலுவில் சம்பவம்

25 செப்டெம்பர் 2024, 7:51 AM
பச்சிளம் பாலகர்கள் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்- கோத்தா கினபாலுவில் சம்பவம்

கோத்தா கினபாலு, செப். 25- கெனிங்காவ், கம்போங் டாலிட்டில் நேற்று

மாலை ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு வயதுச் சிறுவனும் இரண்டு

மாதக் குழந்தையும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

நேற்று மாலை 5.00 மணியளவில் தங்கள் குடியிருப்பு பகுதியைச் சூழ்ந்த

வெள்ளத்தில் அவ்விரு பாலகர்களும் அடித்துச் செல்லப் பட்டதாக சபா

மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையம்

கூறியது.

இந்த வெள்ளத்தின் போது ஏற்பட்ட வேகமான நீரோட்டத்தில் மொத்தம்

ஏழு பேர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் ஐவர் உயிர்த் தப்பிய

வேளையில் இரு பாலகர்களும் காணாமல் போனதாக அம்மையம்

அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பில் இரவு 10.06 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு

தகவல் கிடைத்தது. சோக் மற்றும் கெனிங்காவ் தீயணைப்பு

நிலையங்களிலிருந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு

சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அப்பகுதிக்கு விரைந்தது.

சம்பந்தப்பட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து

மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.