MEDIA STATEMENT

மக்கோத்தா சட்டமன்ற தொகுதி மக்களுக்கு சிறந்த சேவை வழங்கக்கூடிய ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்க நூருல் இசா வேண்டுகோள்

25 செப்டெம்பர் 2024, 5:35 AM
மக்கோத்தா சட்டமன்ற தொகுதி மக்களுக்கு  சிறந்த சேவை வழங்கக்கூடிய ஒரு பிரதிநிதியை  தேர்ந்தெடுக்க நூருல் இசா வேண்டுகோள்

குளுவாங் - ஜோகூர், மக்கோத்தா சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கக்கூடிய ஒரு பிரதிநிதி இருப்பதை உறுதி செய்வதில் பி.கே.ஆர் உறுதியாக உள்ளது என்று கட்சியின் துணைத் தலைவர்  நூருல் இசா   அன்வார் கூறுகிறார்.

வரவிருக்கும் இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர்  சைட் ஹூசேன் சைட் அப்துல்லாவின் வெற்றியை உறுதி செய்ய பாடு படுவதில்  பிகேஆர் கவனமாக உள்ளதாக  கூறினார்.

"பிகேஆரில் இருந்து நாங்கள் மக்கோத்தாவிற்குச் சென்று வாக்காளர்களைச் சந்திக்கிறோம், இங்கு நாங்கள் இருப்பது வாக்காளர்கள்  பெரிய எண்ணிக்கையில் பிஎன் வேட்பாளருக்கு  வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும் என்தற்கே, ஏனெனில் உண்மையிலேயே  மக்களுக்கு  சேவை செய்யக்கூடிய ஒரு பிரதிநிதி இருப்பது முக்கியம்  என்றார் அவர்

"நான் தோழமை மற்றும் நட்பின் உணர்வோடு இங்கு வந்துள்ளேன். வாக்காளர்கள் ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறோம், ஏனென்றால் முதலில் நாங்கள் ஒரு போர்க்களத்தில் இருக்கிறோம், வெற்றி பெறவும் வாக்காளர்களின் முழுமையான ஆதரவை திரட்டவும்  முயற்சி செய்கிறோம்," என்று அவர் கூறினார்.

பினாங்கு கெடிலான் மாநில நிர்வாகக்குழு (எம்பிஎன்) தலைவரான நூருல் இசா, நேற்று தாமான் இல்ஹாமில் நடைபெற்ற "சியாரா காசிஹ்" நிகழ்ச்சியில், பிகேஆர் துணைத் தலைவரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சருமான நிக் நஸ்மி நிக் அஹ்மட்டுடன்  கலந்துகொண்டார்.

இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் கணக்கிடப்படுவதால், செப்டம்பர் 28 ஆம் தேதி அனைத்து வாக்காளர்களும் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் நூருல் இசா கேட்டுக் கொண்டார்.

" அனைவரையும்  திரண்டு வந்து வாக்களிக்க  அழைத்த அவர், நாங்கள் முன்பை விட சிறப்பாக சேவை வழங்க முடியும். நாங்கள் எப்போதும் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கலையும்,  தொடர்ச்சியான மேம்பாட்டுக்கு  பாடுபடுகிறோம்  என்றார். ஜொகூர் மக்களுக்கு, நாங்கள் தொடர்ந்து  சிறந்த சேவையாற்ற விரும்புகிறோம் என அவர் சொன்னார்.

மக்கோத்தா இடைத்தேர்தலில்  சைட் ஹூசேன் சைட் அப்துல்லா மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் முகமது ஹைசான் ஜாபர் இடையே போட்டி நிலவுகிறது.  63 வயதான டத்தோ ஷரீபா அஜிசா சைட் ஜைன் ஆகஸ்ட் 2ஆம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.