பதினைந்து முதல் 45 வயது வரையிலான அந்த நால்வரையும் தடுத்து வைப்பதற்கு அனுமதியை கோத்தா பாரு நீதிமன்ற மாஜிஸ்திரேட் அகமது ஷியாபிக் அஜியாட் நஸ்ரி வழங்கினார்.
அவர்கள் அனைவருக்கும் எதிராக 1984 ஆம் ஆண்டு அச்சு இயந்திர மற்றும் பிரசுரச் சட்டத்தின் 8(2)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்நாட்டினரான அவர்கள் அனைவரும் இன்று காலை 8.40 மணியளவில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டனர்.
பாலியல் பலாத்காரம் மற்றும் கட்டாய உடல் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக நம்பப்படும் 402 சிறார்களை சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களிலுள்ள 20 சமூக நல இல்லங்களிலிருந்து போலீசார் கடந்த 11ஆம் தேதி மீட்டனர்








