இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியா தேர்வு

25 செப்டெம்பர் 2024, 3:08 AM
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியா தேர்வு

கொழும்பு, செப். 25 - முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட   கல்லூரி பேராசிரியை ஹரிணி அமரசூரியாவை இலங்கையின் புதிய பிரதமராக புதிய அதிபர் அனுரகுமார திசநாயகா நியமித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  மார்க்சிஸ்ட் சார்பு கொண்ட  புரட்சி அரசியல்வாதியான 55 வயதான திசநாயகா, அமைச்சரவையின் எஞ்சிய உறுப்பினர்களையும் நியமிக்கத் திட்டமிடப் பட்டுள்ளார்.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியல் துறையில் பட்டம் பெற்ற கல்வியாளரான 54 வயது அமரசூரியா, திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) கூட்டணியின் சார்பாக கடந்த 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இவர் புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவியோடு  வெளி விவகாரத் துறை, கல்வி மற்றும் ஊடக இலாகாக்களையும் தன் வசம் வைத்திருப்பார்.

கடந்த 1960 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட  உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயகா மற்றும் அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க ஆகியோருக்குப் பிறகு  இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக அமர சூரியா விளங்குகிறார்.

என்.பி.பி. கூட்டணியின் வேட்பாளராக திசாநாயகா  போட்டியிட்டார்.  அதில் பாரம்பரியமாக பாதுகாப்புவாதம் மற்றும் அரச தலையீட்டை மையமாகக் கொண்ட மார்க்சிச பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்குக்கும்  அவருடைய ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியும் இடம் பெற்றுள்ளது.

திசநாயகாவும்  அவரது புதிய அமைச்சரவையும் இப்போது ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவும் பணியை எதிர்கொள்கின்றனர். தற்போதைய நாடாளுமன்றத்தில் உள்ள  225 இடங்களில் அவரது கட்சிக்கு வெறும் மூன்றே இடங்கள் இருப்பதால் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு திடீர் பொதுத் தேர்தலை நடத்துவார் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.