நெடுஞ்சாலையோரம் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

25 செப்டெம்பர் 2024, 2:50 AM
நெடுஞ்சாலையோரம் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், செப். 25- ரவாங்கில் உள்ள ரவாங் பைபாஸ்

நெடுஞ்சாலையோரம் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

பழைய உலோகப் பொருட்களை சேகரிக்கும் நபர் ஒருவர் அந்த எலும்புக்

கூட்டைக் கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.

குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் நேற்று

பிற்பகல் 1.00 மணியளவில் 53 வயதுடைய அந்த நபரிடமிருந்து தாங்கள்

தகவலைப் பெற்றதாக உலு சிலாங்கூர் மாவட்ட துணைப் போலீஸ்

தலைவர் டிஎஸ்பி முகமது அஸ்ரி முகமது யூனுஸ் கூறினார்.

அந்த குழந்தையின் உடல் அருகே அடையாளப் பத்திரம் அல்லது

கைப்பேசி போன்ற எந்த பொருளும் காணப்படவில்லை என்று அவர்

அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

உடலை சாலையோரம் வீசியதன் மூலம் பிரசவத்தை மறைந்த குற்றம்

தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 318 வது பிரிவின் கீழ் இந்த சம்பவம்

குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் 03-60641223 என்ற எண்களில்

உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் நிலையத்தை அல்லது அருகிலுள்ள

போலீஸ் நிலையங்களைத் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக்

கொண்டார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.