ஷா ஆலம், செப் 24: இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்திற்காக எம்பிஐ RM150,000 ஒதுக்கியுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியை
விட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று
எம்பிஐ தலைவர் அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, 150,000 ரிங்கிட் ஒதுக்கீட்டில் 35
மடிக்கணினிகளை விநியோகித்து உள்ளோம். இதனால் குறைந்த வருமானம் கொண்ட
குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியை எந்த தடையும் இன்றி தொடர முடியும்``, என்று அவர் கூறினார்.
மேலும், கொடுக்கப்படும் மடிக்கணினிகள் 12 மாதங்களுக்கு இலவச இணைய (சிம்)
சேவையுடன் வழங்கப்படும் என்று அஹ்மட் அஸ்ரி விளக்கினார்.


