பெய்ஜிங், செப். 21 - சீனாவில் உள்ள புலம்பெயர்ந்த மலேசியர்களுடன் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இன்று சந்திப்பு நடத்தினார்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இம்மாதம் 19 முதல் 22 வரை அந்த குடியரசுக்கு தனது முதல் அதிகாரப்பூரவ பயணத்தை மேற்கொண்டுள்ள சுல்தான் இப்ராஹிம், இன்று காலை 10 மணிக்கு இங்குள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஜோகூர் துங்கு இட்ரிஸ் இஸ்கந்தர், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங், வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முகமது ஜைன் மற்றும் சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நார்மன் முஹமது ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வணிகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சீனாவில் உள்ள மலேசிய தூதரக உறுப்பினர்கள் உட்பட சுமார் சுமார் 300 மலேசியர்கள் கலந்து கொண்ட இந்த ஒரு மணி நேர வரவேற்பு நிகழ்ச்சியில் சீன பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
நாட்டின் உயரியத் தலைவரைச் சந்திப்பதில் உற்சாகமாக இருந்த மலேசியர்களுடன் மாமன்னர் அன்புடன் உரையாடி அளவளாவினார்
கடந்த 2013ஆம் ஆண்டு விரிவான விவேக பங்காளித்து நிலைக்கு உயர்த்தப்பட்டதிலிருந்து வேகமாக வளர்ந்து வரும் மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை மன்னரின் அரசுப் பயணம் பிரதிபலிக்கிறது.
இது அரசதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவின் அடையாளமாகவும் விளங்குகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மலேசிய மாமன்னர் சீனாவிற்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ வருகையாகவும் இது அமைகிறது.








