MEDIA STATEMENT

சிறார்களைப் பாதுகாக்க உடனடி போர் நிறுத்தம் அவசியம்- யுனிசெஃப் வலியுறுத்து

21 செப்டெம்பர் 2024, 5:29 AM
சிறார்களைப் பாதுகாக்க உடனடி போர் நிறுத்தம் அவசியம்- யுனிசெஃப் வலியுறுத்து

நியூயார்க், செப். 21-  காஸாவில் சிறார்கள் கொல்லப்படுவதையும் காயப்படுத்துவதையும் முடிவுக்குக் கொண்டு வரவும்  உயிர்காப்பு உதவிகளை உடனடியாக வழங்கவும் , உடனடி போர் நிறுத்தம் அமல் செய்யப்பட வேண்டும் என்று  யுனிசெஃப் துணை நிர்வாக இயக்குநர் டெட் சாய்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல், காஸா மற்றும் மேற்குக் கரை ஆகிய பகுதிகளுக்கான தனது பணி நிமித்தப் பயணம் பற்றி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த சாய்பன், பாதிக்கப்பட்ட பகுதிகளில்  அழிவு மற்றும்  சிறார்கள் எதிர்நோக்கும்  துன்பத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.

இடம் பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்திலிருந்து 19 லட்சம் பேராக  அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

சிறார்களின்  உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுக்கான அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.