MEDIA STATEMENT

3,000 வேலை வாய்ப்புகளை வழங்கும் ஜெலாஜா ஜோப்கேர் இயக்கம் இன்று கோம்பாக்கில் நடைபெறுகிறது

21 செப்டெம்பர் 2024, 2:20 AM
3,000 வேலை வாய்ப்புகளை வழங்கும் ஜெலாஜா ஜோப்கேர் இயக்கம் இன்று கோம்பாக்கில் நடைபெறுகிறது

ஷா ஆலம், செப். 21- கோம்பாக் மாவட்ட நிலையிலான 2024 ஜெலாஜா ஜோப்கேர் இயக்கம் இன்று நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் மூவாயித்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த வேலை வாய்ப்புச் சந்தை தாமான் ஸ்ரீ கோம்பாக், டேவான் பெரிங்கினில் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்று சுங்கை துவா சட்டமன்ற சேவை மையம் கூறியது.

வேலை வாய்ப்பினைத் தேடும் அனைவரும் இந்நிகழ்வில் பங்கு கொள்ளலாம். உடனடி நேர்காணல், வேலை வாய்ப்பு ஆலோசகச் சேவை, கண்காட்சி, தொழில்முனைவோர் விற்பனை மற்றும் இலவச மருத்துவப் பரிசோதனை ஆகிய சேவைகளும் இங்கு வழங்கப்படும்.

நேர்முகப் பேட்டியில் பங்கேற்பதற்கு ஏதுவாக சுயவிபரக் குறிப்பு மற்றும் உரிய ஆவணங்களை உடன் கொண்டு வரும்படி வேலை தேடுவோர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஆர்வம் உள்ளவர்கள் வருகையை உறுதி செய்து கொள்வதற்கு ஏதுவாக https://bit.ly/JOBCAREHULULANGAT2024 என்ற இணைப்பின் வாயிலாக தங்கள் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.